உலக செய்திகள்

என் தந்தைக்கு 27 மனைவிகள், 150 குழந்தைகள் உள்ளனர்:மூத்தமகன் ஒருவரின் பெருமிதம் + "||" + My father has 27 wives, 150 children: Teen's revelation about living in polygamous family goes viral

என் தந்தைக்கு 27 மனைவிகள், 150 குழந்தைகள் உள்ளனர்:மூத்தமகன் ஒருவரின் பெருமிதம்

என் தந்தைக்கு 27 மனைவிகள், 150 குழந்தைகள் உள்ளனர்:மூத்தமகன் ஒருவரின் பெருமிதம்
கனடாவை சேர்ந்த வின்ஸ்டன் பிளாக்மோர் ( வயது 64) 27 மனைவிகள், 150 குழந்தைகளுடன் ஒரே வீட்டில் குடும்பமாக வசித்து வருகின்றனர்.
கனடாவை  சேர்ந்த  வின்ஸ்டன் பிளாக்மோர் ( வயது 64) 27 மனைவிகள், 150 குழந்தைகளுடன்  ஒரே வீட்டில் குடும்பமாக வசித்து வருகின்றனர்.

சுமார் 200 குடும்ப உறுப்பினர்களுடன் பாலிகேமி முறையில், மகிழ்ச்சியாக,என்று வின்ஸ்டனின் குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.பாலிகேமி என்பது கணவன் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளுடன் வாழும் முறை.

அமெரிக்காவில் வசித்து வரும் பிளாக்மோரின் மகன் மெர்லின், டிக்டாக்கில் தனது குடும்பத்தினர் போட்டோக்களை இணைத்து வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில், அனைவரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தோம் . ஆனால் சமீபகாலமாக தான் வேலை நிமித்தமாக அமெரிக்காவின் வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருவதாக தெரிவித்தார்.

தன் அம்மாவை ‘மம்’ எனவும், அப்பாவின் பிற மனைவிகளை ‘மதர்’ என அழைப்பதாக பதிவுட்டுள்ளார் மெர்லின். 3 குடும்பத்தை சேர்ந்த அக்கா மற்றும் தங்கைகளை தனது தந்தை திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும், பிற சகோதர, சகோதரிகளை போல தாங்கள் சண்டையிட்டுக்கொள்வதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தனது அப்பாவுக்கு, அதிகபட்சமாக ஒரே ஆண்டில் 12 குழந்தைகள் பிறந்திருக்கிறது. அவர்கள் அனைவருக்கும் ‘எம்’ என்கிற ஆங்கில எழுத்தில் துவங்கும் பெயர்கள் தான் வைக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு தேவையான காய்கறிகளை நாங்களே விவசாயம் செய்து அறுவடை செய்து கொள்வோம் என்று மெர்லின் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. உடலை காந்தமாக மாற்ற காந்த கோலிகளை முழுங்கிய மாணவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை
இங்கிலாந்தில் அறிவியல் ஆய்வுகளில் அதிக ஆர்வம் கொண்ட பள்ளி மாணவன் சோதனை முயற்சியாக காந்த கோலிகளை முழுங்கியதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து மீண்டுள்ளான்.
2. மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட தனது எஜமானருக்காக 6 நாட்கள் மருத்துவமனை வாசலிலில் காத்திருந்த நாயின் பாசம்
மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட தனது எஜமானருக்காக 6 நாட்கள் மருத்துவமனையின் வாசலிலேயே காத்திருந்த நாய் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
3. தண்ணீர் என்றாலே பயம்...67 ஆண்டுகளாக குளிக்காத உலகிலேயே அழுக்கான மனிதர்
உலகிலேயே அழுக்கான மனிதராக ஈரான் நாட்டைச் சேர்ந்த அமோவ் ஹாஜி அறியப்படுகிறார். கடந்த 67 ஆண்டுகளாக இவர் குளிக்கவில்லை.
4. குளிக்கும்போது ஐபோனை பயன்படுத்திய இளம்பெண் மின்சாரம் தாக்கி பலி
ரஷியாவில் குளிக்கும்போது ஐபோனை பயன்படுத்திய இளம்பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
5. இங்கிலாந்தின் முதல் அபூர்வமான தம்பதி தந்தையே தாயானார்
இங்கிலாந்தில் , முதல் பாலின மாற்றம் செய்துகொண்ட தம்பதியர், இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.