அமெரிக்காவில் புதிதாக 1.15 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று


அமெரிக்காவில் புதிதாக 1.15 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 27 Jan 2021 10:19 PM GMT (Updated: 28 Jan 2021 12:32 AM GMT)

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வாஷிங்டன், 

உலக வல்லரசு நாடான அமெரிக்கா, கொரோனாவின் கோரப்படியில் சிக்கி தவித்து வருகிறது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி ஒருபக்கம் போடப்பட்டு வந்தாலும், மறுபக்கம் தொற்று பரவல் வேகமாக உள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 61 லட்சத்து 30 ஆயிரத்து 188- ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் இன்று மேலும் 2,900- பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 38 ஆயிரத்து 508- ஆக உயர்ந்துள்ளது.   கொரோனா பாதிப்பில் இருந்து  1 கோடியே 58 லட்சத்து 65 ஆயிரத்து 645- பேர் இதுவரை  குணம் அடைந்துள்ளனர்.


Next Story