செவ்வாய் கிரகத்துக்கு நாசா அனுப்பிய ரகசிய செய்தி! 6 பேருக்கு மட்டுமே தெரிந்த உண்மை


செவ்வாய் கிரகத்துக்கு நாசா அனுப்பிய ரகசிய செய்தி!  6 பேருக்கு மட்டுமே தெரிந்த உண்மை
x
தினத்தந்தி 25 Feb 2021 5:16 PM GMT (Updated: 25 Feb 2021 5:16 PM GMT)

செவ்வாய் கிரகத்தில் பெர்சிவரென்ஸ் ரோவர் தரையிறங்க உதவிய பாராசூட்டில் பொறிக்கப்பட்டிருந்த ரகசிய குறியீடு குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாஷிங்டன்

நாசாவின் பெர்சிவரென்ஸ் ரோவர் பயன்படுத்திய மிகப்பெரிய பாராசூட்டில் ஒரு ரகசிய செய்தி இருந்துள்ளது. அதில் டேர் மைடி திங் (Dare Mighty Things) என்று வாக்கியம் பைனரி குறியீட்டைப் பயன்படுத்தி, வெள்ளை மற்றும் சிகப்பு வண்ணங்களைக் கொண்டு ரகசியமாக பாராசூட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் இருந்தவர் கணினி பொறியாளரான இயன் கிளர்க். வரலாற்று சிறப்பு மிக்க இந்த விண்வெளி நடவடிக்கையில், பாராசூட்டில் ஒரு அசாதாரண வடிவத்தை கொடுக்க பொறியாளர்கள் விரும்பியுள்ளார்.அதனையடுத்து, குறுக்கெழுத்து பொழுதுபோக்காக இயன் கிளார்க்  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த யோசனையை கொண்டு வந்துள்ளார். இதை 'சூப்பர் பன்' என்று அழைத்தகிளர்க், அதை ஒரு ரகசிய செய்தியாக மாற்றுவதில் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.

(Dare Mighty Things) டேர் மைடி திங் என்பது அமெரிக்காவின் 26-வது ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்  கூறிய தத்துவ வாக்கியங்களிலிருந்து எடுக்கப்பட்ட மிகவும் பிரபலமான ஒரு வரியாகும் மேலும், அந்த பாராசூட்டில் கலிபோர்னியாவின் ஜெட் புராபல்ஷன் ஆய்வகம்-  மிஷனின் தலைமையகத்திற்கான ஜிபிஎஸ் ஆயத்தொகுப்புகளையும் அவர் சேர்த்துள்ளார்.

விண்வெளி ஆர்வலர்கள் ஒரு சில மணிநேரங்களில் அந்த இரகசிய செய்தியை டிகோடு செய்ததால், அடுத்த முறை ரகசிய செய்திகளுடன் அவர் மிகவும் ஆக்கப்பூர்வமாக இருக்கவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.செவ்வாய் கிரகத்தில் ரோவர் தரையிறங்குவதற்கு முன்பு இந்த ரகசிய செய்தி பற்றி கிளர்க் உட்பட வெறும் 6 பேருக்கு மட்டுமே தெரியும் எனக் கூறப்படுகிறது. விண்வெளி ஆர்வலர்கள் மூலம் தற்போது வெகு விரைவில் இந்த ரகசிய குறியீடு வெட்டவெளிச்சமானது.

Next Story