இங்கிலாந்தில் 6 பேருக்கு பிரேசிலில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
லண்டன்,
உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், உருமாற்றம் அடைந்து மீண்டும் பரவலின் வேகத்தை அதிகரித்து வருகிறது. தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடக்கும் இந்த நேரத்தில் உருமாறிய கொரோனா உலக நாடுகளுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் கடந்த சில மாதங்களுக்கு கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா, அந்நாட்டில் மின்னல் வேகத்தில் பரவியது. இதனால் ஐரோப்பிய நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. தற்போது இங்கிலாந்தில் மெல்ல மெல்ல கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துவருகிறது.
இந்த நிலையில், பிரேசிலில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ், இங்கிலாந்தில் 6 பேருக்கு பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் சிலர் பிரேசிலில் இருந்து இங்கிலாந்து வந்தவர்கள் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய வகை வைரஸ் பாதிப்பு தென்பட்டதையடுத்து, தெற்கு க்ளோசெஸ்டர்ஷைர் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
உலகையே முடக்கிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று தனது பரவலை தொடங்கி, ஓர் ஆண்டை நிறைவு செய்துவிட்டது. அதன் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. இரண்டாவது அலையும் வீச தொடங்கி இருப்பதால் பலரும் பீதியில் இருக்கிறார்கள்.
திமுக பொருளாளரும் ஸ்ரீபெரும்புதூர் எம்பியுமான டி.ஆர்.பாலுவுக்கும், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவும், திமுக வேட்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.