உலக செய்திகள்

ஜோ பைடன் துணை உதவியாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமனம் + "||" + Indian-American Maju Varghese Appointed Deputy Assistant To Joe Biden

ஜோ பைடன் துணை உதவியாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமனம்

ஜோ பைடன் துணை உதவியாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமனம்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் துணை உதவியாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மஜூ வர்க்கீஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வாஷிங்டன்:

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், மஜூ வர்கீஸ். இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்கிய ஜோ பைடனின் பிரசார நடவடிக்கைகளுக்கான தலைமை செயல் அதிகாரியாகவும், மூத்த ஆலோசகராகவும் செயல்பட்டவர். தேர்தல் வெற்றிக்கு பின்னர் ஜனாதிபதி ஜோ பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் பதவியேற்பு தொடர்பான ஏற்பாடுகளை கவனித்த தொடக்க குழுவின் 4 உறுப்பினர்களில் ஒருவராகவும் மஜூ வர்க்கீஸ் பணியாற்றினார்.

இந்த நிலையில் மஜூ வர்க்கீஸ், ஜனாதிபதி ஜோ பைடனின் துணை உதவியாளராகவும், வெள்ளை மாளிகை ராணுவ அலுவலக இயக்குனராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் வெள்ளை மாளிகையில் பணிபுரிவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக இவர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்திலும் வெள்ளை மாளிகையில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. 90% பெரியவர்கள் தடுப்பூசி போட தகுதியுடையவர்கள் என்று அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன் - ஜோ பைடன்
90% பெரியவர்கள் தடுப்பூசி போட தகுதியுடையவர்கள் என்று அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
2. ஜோ பைடனின் கொரோனா நிவாரண நிதி மசோதா: அமெரிக்க மாளிகையில் நிறைவேறியது
ஜனாதிபதி ஜோ பைடனின் கொரோனா நிவாரண நிதி மசோதா அமெரிக்க மாளிகையில் நிறைவேறியது.
3. ஜோ பைடனின் பட்ஜெட் வேட்பாளரான நீரா தாண்டன் நியமனத்திற்கு மேலும் 2 எம்.பிக்கள் எதிர்ப்பு
ஜோ பைடனின் பட்ஜெட் வேட்பாளரான நீரா தாண்டன் நியமனத்திற்கு மேலும் 2 எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
4. ஜோ பைடனின் பட்ஜெட் வேட்பாளரான நீரா தாண்டன் நியமனத்தில் சிக்கல்
ஜோ பைடனின் பட்ஜெட் வேட்பாளரான நீரா தாண்டன் நியமனத்தில் சிக்கல் எழுந்துள்ளது.
5. மியான்மரில் அரசியல் தலைவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
மியான்மரில் கடந்த 1 ஆம் தேதி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, ஆங் சான் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.