பிரான்ஸ் நாட்டு கோடீசுவரர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்


பிரான்ஸ் நாட்டு கோடீசுவரர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்
x
தினத்தந்தி 7 March 2021 7:45 PM GMT (Updated: 7 March 2021 7:45 PM GMT)

பிரான்ஸ் நாட்டு கோடீசுவரர் மற்றும் எம்.பி.யான ஒலிவியர் டசால்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து உள்ளார்.

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டின் மத்திய-வலது குடியரசு கட்சியின் எம்.பி.யாக இருந்தவர் ஒலிவியர் டசால்ட் (வயது 69).  நாட்டின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான இவர், பிரான்சின் வடக்கே நார்மண்டி நகரில் கலாவ்டோஸ் என்ற பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளார்.

கடந்த இரு நாட்களுக்கு முன் பாரீஸ் நகரருகே பியூவாயிஸ் என்ற பகுதியில் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் மற்றும் அந்நாட்டு உள்துறை மந்திரி ஜெரார்டு டார்மனின் ஆகியோருடன் பொது நிகழ்ச்சி ஒன்றில் ஒலிவியர் காணப்பட்டார்.

அவரது மறைவுக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் டுவிட்டர் வழியே அஞ்சலி செலுத்தி கொண்டார்.  அதில், நம்முடைய நாட்டிற்கு சேவையாற்றும் பணியை டசால்ட் ஒருபோதும் நிறுத்தியதே கிடையாது.  அவரது திடீர் மரணம் பேரிழப்பு ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்து உள்ளார்.

பிரான்சின் தொழிலதிபரான செர்கே டசால்ட் என்பவரின் மூத்த மகன் ஒலிவியர் ஆவார்.  செர்கே, ரபேல் போர் விமானங்களை கட்டும் தொழிலை செய்து வருவதுடன், லே பிகாரோ என்ற செய்தி நிறுவனத்திற்கு உரிமையாளராகவும் இருந்து வருகிறார்.

செர்கேவின் தந்தை மார்செல், பொறியாளர் என்பதுடன் முதல் உலக போரில் பிரான்ஸ் விமானங்களுக்கு தேவையான புரொப்பலர் ஒன்றை கண்டறிந்து மேம்படுத்தியதற்காக கொண்டாடப்பட்டவர் ஆவார்.

Next Story