துபாயில் 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே குதித்து இந்தியர் சாகசம்; “71-வது பிறந்த நாளை கொண்டாடினார்”


துபாயில் 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே குதித்து இந்தியர் சாகசம்; “71-வது பிறந்த நாளை கொண்டாடினார்”
x
தினத்தந்தி 18 March 2021 2:53 PM GMT (Updated: 18 March 2021 2:53 PM GMT)

துபாயில், ‘ஸ்கை டைவிங்' பயிற்சியாளருடன் இணைந்து 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே குதித்து இந்தியர் ஒருவர் தனது 71-வது பிறந்த நாளை கொண்டாடி சாகசம் புரிந்தார்.

துபாயில், ‘ஸ்கை டைவிங்' பயிற்சியாளருடன் இணைந்து 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே குதித்து இந்தியர் ஒருவர் தனது 71-வது பிறந்த நாளை கொண்டாடி சாகசம் புரிந்தார்.

இந்தியர்
இந்தியாவைச் சேர்ந்த ஹரிநாராயண் நாயர் துபாயில் வசித்து வருகிறார். அவர் தனது 71-வது பிறந்த நாளை கொண்டாட திட்டமிட்டார். இதற்காக ‘ஸ்கை டைவிங்’ மூலம் 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே குதித்து கொண்டாட திட்டமிட்டார்.இந்த உயரத்தில் குதிக்க 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை கட்டாயம் ஆகும். இதற்காக அவர் ரத்த அழுத்த பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவருக்கு ரத்த அழுத்தம் வழக்கமான 120/80 அளவை விட 160/80 என இருந்துள்ளது.

அனுமதி
இதற்காக 3 மருத்துவர்களிடம் சென்று பரிசோதனை செய்தார். எனினும் மருத்துவ பரிசோதனை சான்றிதழ் பெற முடியவில்லை. இதனையடுத்து ஒரு மருத்துவரிடம் ஆலோசனை செய்தார். பின்னர் யோகா உள்ளிட்ட பயிற்சிகள் மூலம் ரத்த அழுத்தத்தின் அளவை குறைத்து வந்தார்.தனது பிறந்த நாள் அன்று 140/80 முதல் 145/80 வரை ரத்த அழுத்தம் இருந்தது. இந்த அளவானது தனது வயதுக்கு ஏற்றதாகும். எனவே விமானம் மூலம் ‘ஸ்கை டைவிங்' முறைப்படி குதிக்க அனுமதி கிடைத்தது.

13 ஆயிரம் அடி உயரம்
இதனைத் தொடரந்து அவர் ‘ஸ்கை டைவிங்' பயிற்சியாளருடன் இணைந்து 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே குதித்து தனது பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். இதனை அவரது குடும்பத்தினர் அனைவரும் தரையில் இருந்து பார்த்து ரசித்தனர். இதற்கு முன்னர் அவரது 2 மகள்களும், மருமகனும் ‘ஸ்கை டைவிங்' முறையில் குதித்து சாகசம் புரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story