உலக செய்திகள்

ஜொலிக்கும் அலாங்காரத்துடன் மணப்பெண்- மாப்பிள்ளை வெறும் ஷார்ட்சுடன் + "||" + Bride with sparkling attire Groom with bare shorts

ஜொலிக்கும் அலாங்காரத்துடன் மணப்பெண்- மாப்பிள்ளை வெறும் ஷார்ட்சுடன்

ஜொலிக்கும் அலாங்காரத்துடன் மணப்பெண்- மாப்பிள்ளை வெறும் ஷார்ட்சுடன்
இந்தோனேஷியாவில் திருமணத்தின் போது மாப்பிள்ளை காயங்களுடன் வெறும் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து வந்து உட்கார்ந்திருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஜாவா

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.இந்த திருமணம் கடந்த 2-ஆம் தேதி நடைபெற்றுள்ளது. அப்போது மணப் பெண் அழகாக ஜொலிக்க, அவரை திருமணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளையோ, உடலில் காயங்களுடன் ஒரு ஷார்ட்ஸ் மட்டும் அணிந்த படி, திருமணம் செய்யும் இடத்திற்கு வந்து அமர்ந்தார்.

இதைக் கண்ட அங்கிருந்த சிலர் இதைப் புகைப்படமாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட, அது அதிக அளவில் பகிரப்பட்டது. ஒருவர்  தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்த புகைப்படத்தை வெளியிட, அது 14500-க்கும் மேற்பட்ட லைக்குகளையும், 2500-க்கும் மேற்பட்ட ரீடுவிட்களையும் பெற்றது.இதைக் கண்ட இணையவாசிகள் பலரும் கிண்டலான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால், இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கடந்த 2-ஆம் தேதி சுப்ராப்டோ என்பவரை எலிண்டா டிவி கிறிஸ்டியானி என்ற பெண் திருமணம் செய்து கொண்டார்.இவர்களின் திருமணம் இந்தோனேsiசியாவின் கிழக்கு ஜாவாவின் நங்கன்ஜுக் ரீஜென்சியில் உள்ள லெங்காங் பகுதியில் நடைபெற்றுள்ளது.இதில், மாப்பிள்ளை ஆடை அணியாமல், உடலில் காயங்களுடன் இருந்தார். 

இதற்கு எலிண்டா டிவி கிறிஸ்டியானி கூறுகையில், திருமணத்திற்கு சில தினங்களுக்கு முன்பு, அவர் பெட்ரோல் வாங்குவதற்காக வெளியில் சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட விபத்தினால் உடலில் காயங்கள் ஏற்பட்டது. இதனால் அவரால் உடல் முழுவதும் ஆடை அணிய முடியாது. அதுமட்டுமின்றி அவர் அந்த விபத்தின் காரணமாக திடீரென்று சுயநினைவை இழந்ததாக கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. திருமணத்தில் மருமகளாக வந்தவர் தனது மகள் உண்மையை அறிந்து கொண்ட தாய்
சீனாவில் தனது மகன் திருமணத்தில் கலந்து கொள்ள வந்த தாய் தனது வருங்கால மருமகள் உண்மையில் தனது வயிற்றில் பிறந்த மகள் என்ற உண்மையை அறிந்து கொண்டுள்ளார்.
2. மனித வரலாற்றில் முதன் முறையாக 3 பிறப்புறுப்புகளுடன் பிறந்த ஆண் குழந்தை
ஈராக்கில் மனித வரலாற்றில் முதன் முறையாக 3 பிறப்புறுப்புகளுடன் ஆண் குழந்தை பிறந்து உள்ளது.
3. அழகான ஆண்களை கண்டால் மயங்கி விழும் பெண்; விசித்திர நோயால் பாதிப்பு
அழகான ஆண்களை கண்டால் மயங்கி விழும் பெண்; விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு உள்ள அதிசய பெண்
4. மாடியில் இருந்து விழுந்தவரை காப்பாற்றும் திரைப்படத்தை மிஞ்சும் வகையில் சம்பவம் -வீடியோ
திரைப்படத்தை மிஞ்சும் வகையில் சாகச சம்பவம் ஒன்றை நிகழ்த்தி கேரளாவில் பாபு என்பவர் பிரபலமடைந்து உள்ளார்.
5. கர்ப்பிணி பெண்ணை கொலை செய்து அவரது வயிற்றில் இருந்த குழந்தையை திருடிய பெண்
பிரேசிலில் எட்டு மாத கர்ப்பிணிப்பெண் ஒருவர் குளியலறையில் இறந்துகிடக்க, அவரது வயிற்றிலிருந்த குழந்தை மாயமாகியிருந்தது.