அமீரகத்தின் 10 கோடி உணவு வழங்கும் திட்டம்: இந்திய தொழிலதிபர் 10 லட்சம் திர்ஹாம் நன்கொடை


அமீரகத்தின் 10 கோடி உணவு வழங்கும் திட்டம்: இந்திய தொழிலதிபர் 10 லட்சம் திர்ஹாம் நன்கொடை
x

ரமலான் மாதம் தொடங்கியதை முன்னிட்டு அமீரக துணை அதிபரும், துபாய் ஆட்சியாளருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் கடந்த வாரம் 20 நாடுகளில் வசிக்கும் எளிய மக்களுக்கு 10 கோடி உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார்.

துபாய்,

ரமலான் மாதம் தொடங்கியதை முன்னிட்டு அமீரக துணை அதிபரும், துபாய் ஆட்சியாளருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் கடந்த வாரம் 20 நாடுகளில் வசிக்கும் எளிய மக்களுக்கு 10 கோடி உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார். இதில் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் உலகளாவிய முயற்சிகள் திட்டத்தின் சார்பில் இணையதளம் ஏற்படுத்தப்பட்டு அதில் பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்கள், சமூக நல அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் நிதி வழங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதில் பல்வேறு அரசுத்துறைகளும், பொதுத்துறை நிறுவனங்களும் பங்களிப்பை அளித்து வருகிறது. இந்த நிலையில் அமீரகம் உள்பட பல்வேறு நாடுகளில் ஹைப்பர்மார்க்கெட் கிளைகளை நிறுவி வரும் லூலூ குழுமத்தின் சார்பில் 10 லட்சம் திர்ஹாம் நன்கொடை வழங்கப்படுவதாக அதன் தலைவர் எம்.ஏ.யூசுப் அலி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ‘‘இந்த நன்கொடை புனித ரமலான் மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி புரிவதாக உள்ளது’’ என குறிப்பிட்டார்.


Next Story