உலக செய்திகள்

பிரான்சில் ஒரே நாளில் 36 ஆயிரம் பேருக்கு கொரோனா + "||" + Covid 19 in France on april 17

பிரான்சில் ஒரே நாளில் 36 ஆயிரம் பேருக்கு கொரோனா

பிரான்சில் ஒரே நாளில் 36 ஆயிரம் பேருக்கு கொரோனா
பிரான்சில் ஒரே நாளில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாரிஸ்,

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சிலும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில்  கட்டுப்பாடுகளும் பிரான்சில் அமல்படுத்தப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 36 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,224,321- ஆக உயர்ந்துள்ளது.  

கொரோனாவுக்கு ஒரே நாளில் 313- பேரும் இதுவரை 100,404- பேரும் உயிரிழந்துள்ளனர்.  கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,046,518- ஆக உள்ளது.  தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1,077,399- ஆகும். 


தொடர்புடைய செய்திகள்

1. மிசோரம்: தான் கொரோனா சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையை சுத்தம் செய்த மந்திரி
மிசோரம் மாநில மின்சாரத்துறை மந்திரி லால்சிர்லியானாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கோவா: ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கடந்த 4 நாட்களில் கொரோனா சிகிச்சை மையத்தில் 75 பேர் பலி
கோவா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சி மையத்தில் கடந்த 4 நாட்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக 75 பேர் உயிரிழந்துள்ளனர்.
3. இந்தியாவுக்கு 40 லட்சம் கொரோனா பரிசோதனை கருவிகள் உள்பட மருத்துவ உபகரணங்களை அனுப்ப நியூயார்க் நகர நிர்வாகம் முடிவு
இந்தியாவுக்கு 40 லட்சம் கொரோனா பரிசோதனை கருவிகள் உள்பட பல்வேறு மருத்துவ உபகரணங்களை அனுப்ப நியூயார்க் நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
4. இந்தியா உறுதியாக இருங்கள் - மூவர்ணக்கொடி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஆஸ்திரேலிய பல்கலை. கட்டிடம்
இந்தியா உறுதியாக இங்கள் என்ற வாசகத்துடன் மூவர்ணக்கொடி வண்ண விளக்குகளால் ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலை கழக கட்டிடம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
5. கேரளாவில் இன்று 34 ஆயிரம் பேருக்கு கொரோனா - 93 பேர் பலி
கேரளாவில் இன்று 34 ஆயிரத்து 696 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.