ரெம்டெசிவர் மருந்து மீதான இறக்குமதி வரி ரத்து : மத்திய அரசு


ரெம்டெசிவர் மருந்து மீதான இறக்குமதி வரி ரத்து : மத்திய அரசு
x
தினத்தந்தி 21 April 2021 12:25 AM GMT (Updated: 21 April 2021 12:25 AM GMT)

ரெம்டெசிவிர் மருந்து மீதான இறக்குமதி வரிக்கு மத்திய அரசு விலக்களித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

ரெம்டெசிவிர் மருந்து மீதான இறக்குமதி வரிக்கு மத்திய அரசு விலக்களித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் " கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையின்போது அளிக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்து மற்றும் அதன் மூலப்பொருள்கள், ரெம்டெசிவிர் ஊசி உள்ளிட்டவை மீதான இறக்குமதி வரிக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. 

பொதுநலன் கருதி மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு நிகழாண்டு அக்டோபர் 31-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று ' தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, வைரஸ் எதிர்ப்பு மருந்தான ரெம்டெசிவர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து  அந்த மருந்து, அதன் மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு கடந்த 11-ஆம் தேதி மத்திய அரசு தடை விதித்தது.

Next Story