இந்தியாவில் கொரோனா 2-வது அலை: நேபாள எல்லை மூடல்


இந்தியாவில் கொரோனா 2-வது அலை: நேபாள எல்லை மூடல்
x
தினத்தந்தி 1 May 2021 2:26 PM GMT (Updated: 1 May 2021 2:26 PM GMT)

இந்தியாவில் கொரோனா 2-வது அலை அதிகரித்துவருவதையொட்டி நேபாளம் அதன் எல்லையை மூடியது.


காத்மண்டு,

நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதனால், நாள்தோறும் கொரோனா பாதிப்புகள் உச்சமடைந்து வருகின்றன.  ஒரே நாளில் 3,86,452 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை தெரிவித்து இருந்தது.  இதனால், தொடர்ந்து 9வது நாளாக 3 லட்சத்திற்கும் கூடுதலான பாதிப்புகளை நாடு சந்தித்தது. இந்தியாவில் ஒரே நாளில் 4.01 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

இந்தநிலையில் இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு தீவிரமாக உள்ளதையொட்டி அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளன. மருத்துவ உபகரணங்கள், வெண்டிலேட்டர் உள்ளிட்ட பலவற்றை பிற நாடுகள் இந்தியாவிற்கு அளித்து வருகின்றன. சிறிய நாடான நேபாளத்தில் இதுவரை வைரஸ் தாக்கத்திற்கு 3,278 பெயர் பலியாகியுள்ளனர். 3 லட்சத்து 23 ஆயிரம்பேர் வைரஸ் தாக்கம் அடைந்துள்ளனர். இதனை அடுத்து அண்டை நாடுகளிலிருந்து யாரும் தங்கள் நாட்டுக்குள் கொரோனா வைரஸை பரப்ப விடாமலிருக்க நேபாள அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், இந்தியாவிலிருந்து நேபாளத்தில் நிலம் வழியாக உள்ளே வர 22 வழிகள் உள்ளன. இவை அனைத்தும் தற்போது மூடப்பட்டுள்ள நிலையில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நேபாளத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மொத்த 35  நிலம் வழியாக எல்லை பகுதி உள்ளது. அதில்  22 ஐ மூடுமாறு கோவிட் நெருக்கடி மேலாண்மை ஒருங்கிணைப்புக் குழு (சிசிஎம்சி) அமைச்சர்கள் குழு சபைக்கு  பரிந்துரைத்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story