உலக செய்திகள்

நேபாளம்: கொரோனா பாதிப்பில் புதிய உச்சம் + "||" + Nepal records highest daily surge of 7,137 new COVID-19 cases

நேபாளம்: கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்

நேபாளம்: கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்
நேபாளத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவு புதிய உச்சம் தொட்டுள்ளது.
காத்மாண்டு,

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்  தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் 7 ஆயிரத்து 137- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய நேற்று  16,147 பேருக்கு சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 

தொற்று பாதிப்புடன் 48,711- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து 1,612- பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 67- பேரும், இதுவரை 3,325- பேரும் உயிரிழந்துள்ளனர்.  

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் தீவிரமாக உள்ளதால், இந்தியாவுடனான 22 எல்லை முனைகளை மூடுவதாக நேபாள அரசு அண்மையில் அறிவித்தது.  இந்தியா - நேபாளம் இடையே 13 எல்லை முனைகளில் மட்டுமே தற்போது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. நேபாளத்தில் கே.பி.சர்மா ஒளி மீண்டும் பிரதமராக பதவியேற்பு
நேபாளத்தில் எதிர்க்கட்சிகள் ஆட்சியமைக்க தவறியதால், கே.பி.சர்மா ஒளி மீண்டும் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.
2. நேபாளத்தில் சர்வதேச விமானங்களுக்கான தடை நீட்டிப்பு
நேபாளத்தில் சர்வதேச விமானங்களுக்கான தடை மே இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
3. தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது- போலீசார் தீவிர கண்காணிப்பு
சென்னையில் 10 ஆயிரம் போலீசாரும், தமிழகம் முழுவதும் 1 லட்சம் காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
4. முழு ஊரடங்கு: சென்னையில் 10 ஆயிரம் போலீசார் தீவிர கண்காணிப்பு
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், சென்னையில் 10 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
5. கொரோனா பரவல் அதிகரிப்பால் மே.வங்கத்தில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
கொரோனா பரவல் அதிகரிப்பால் மேற்கு வங்காளத்தில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.