உலக செய்திகள்

மேற்கு ஆப்ரிக்காவில் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்....மிரள வைத்த இளம்பெண் + "||" + Mali Woman Gives Birth To Nonuplets In Morocco, All 9 Babies 'doing Well'

மேற்கு ஆப்ரிக்காவில் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்....மிரள வைத்த இளம்பெண்

மேற்கு ஆப்ரிக்காவில் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்....மிரள வைத்த இளம்பெண்
தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலி நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
மாலிக்,

மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள மாலி நாட்டைச்சேர்ந்த 25 வயது பெண் ஹலிமா சிஸ் என்ற இளம்பெண் ஒரே பிரசவத்தில் 5 பெண் குழந்தைகள் மற்றும் 4 ஆண் குழந்தைகள் என 9 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். குழந்தைகளும் தாயும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 

இதுகுறித்து பேசிய மாலி சுகாதாரத்துறை மந்திரி பாண்டா சிபி, இளம்பெண் சிஸ்ஸிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழுவினருக்கு நன்றி.

அடுத்த சில வாரங்களில் தாயும், குழந்தைகளும் சொந்த ஊர் திரும்பவுள்ளதாக கூறினார். ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் என்பது அரிதிலும் அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.