கொரோனா பாதிப்பு: டுவிட்டர் இந்தியாவுக்கு ரூ. 110 கோடி நிதியுதவி


கொரோனா பாதிப்பு: டுவிட்டர் இந்தியாவுக்கு ரூ. 110 கோடி நிதியுதவி
x
தினத்தந்தி 11 May 2021 8:44 AM GMT (Updated: 11 May 2021 8:44 AM GMT)

கொரோனா தடுப்புப் பணிகளுக்கு உலகம் முழுவதும் உள்ள பல அமைப்புகள், நிறுவனங்கள், தன்னார்வலர்கள் நிதியுதவி அளித்து வருகின்றன.

நியூயார்க்

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்து நாள்தோறும் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர், ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர்.இந்தியாவின் நிலை உலக நாடுகளுக்கே கவலையளிப்பதாக இருப்பதால், பல்வேறு நாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 29 ஆயிரத்து 9421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,29,92,517 ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 3,876 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2,49,992 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் நாட்டில் ஆக்சிஜன், படுக்கைகள், வென்டிலேட்டர் தட்டுப்பாடு நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

இதனிடையே,கொரோனா தடுப்புப் பணிகளுக்கு உலகம் முழுவதும் உள்ள பல அமைப்புகள், நிறுவனங்கள், தன்னார்வலர்கள் நிதியுதவி அளித்து வருகின்றன.

அந்தவகையில் கொரோனா நிவாரண நிதியாக டுவிட்டர் நிறுவனம் இந்திய மக்களுக்கு 15 மில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் சுமார்  ரூ. 110 கோடி) நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. 

இந்த தொகை கேர் ,எய்டு இந்தியா ,சேவா இன்டர்நேஷனல் அமெரிக்கா  ஆகிய மூன்று நிறுவனங்களுக்கும் முறையே 10 மில்லியன் டாலர் (ரூ.73.47 கோடி  ), 2.5 மில்லியன் டாலர்(ரூ,18.36 கோடி ),2.5 மில்லியன் டாலர்(ரூ.18.36 கோடி ) என மூன்று அரசு சாரா நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜேக்பேட்ரிக் கூறி உள்ளார்.

Next Story