உலக அளவில் கொரோனா இறப்பு விகிதம் 2 முதல் 3 மடங்கு அதிகம் இருக்கும் - உலக சுகாதார அமைப்பு தகவல்


உலக அளவில் கொரோனா இறப்பு விகிதம் 2 முதல் 3 மடங்கு அதிகம் இருக்கும் - உலக சுகாதார அமைப்பு தகவல்
x
தினத்தந்தி 21 May 2021 4:55 PM GMT (Updated: 21 May 2021 4:55 PM GMT)

உலக அளவில் கொரோனா இறப்பு விகிதம் 2 முதல் 3 மடங்கு அதிகம் இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

மாஸ்கோ,

உலக அளவில் தினமும் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் மரணித்து வருகின்றனர். ஆனால் உயிரிழப்பு இதைவிட பலமடங்கு அதிகமாக இருப்பதாகவும், பல உயிரிழப்புகள் பதிவு செய்யப்படவில்லை என்றும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டு உள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில், ‘கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி வரை உலக அளவில் குறைந்தபட்சம் 30 லட்சம் பேர் வரை கொரோனாவால் உயிரிழந்திருக்கின்றனர். ஆனால் அப்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட 18 லட்சத்தை விட இது 12 லட்சம் அதிகம் ஆகும்’ என்று அதிர்ச்சிகர தகவல் வெளியாகி இருக்கிறது.

இதைப்போல தற்போது அதிகாரபூர்வமாக 34 லட்சத்துக்கு அதிகமானோர் பலியாகி இருப்பதாக கூறப்பட்டு இருந்தாலும், இதுவும் மிகப்பெரும் அளவில் தவறாக மதிப்பிடப்பட்டு இருப்பதாகவும், உண்மையான பலி விகிதம் 2 முதல் 3 மடங்கு அதிகம் என்றும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டு உள்ளது.

கடந்த ஆண்டு வரையிலேயே 12 லட்சம் உயிரிழப்புகள் பதிவு செய்யப்படாத நிலையில், தற்போது அது இன்னும் அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.

Next Story