உலக செய்திகள்

இந்திய பயணிகள் விமானத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது நெதர்லாந்து + "||" + Netherlands Lifts Ban On Passenger Flights From India Over Covid Starting Today

இந்திய பயணிகள் விமானத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது நெதர்லாந்து

இந்திய பயணிகள் விமானத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது நெதர்லாந்து
இந்தியாவில் இருந்து பயணிகள் விமானம் வர விதிக்கப்பட்டு இருந்த தடையை நெதர்லாந்து நீக்கியுள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் தீவிரம் அடையைத்தொடங்கியதும் பல்வேறு நாடுகள் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதிக்கத் தொடங்கின. அந்த வகையில், கடந்த ஏப்ரல் 26- ஆம் தேதி இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு நெதர்லாந்து தடை விதித்தது. இந்த தடையானது ஜூன் 1 ஆம் தேதி வரை இருக்கும் என்று நெதர்லாந்து அரசு தெரிவித்து இருந்தது. 

இந்த நிலையில், இந்திய பயணிகள் விமானங்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை நெதர்லாந்து அரசு நீக்கியுள்ளது.  ஆம்ஸ்டர்டாமில் உள்ள இந்திய தூதரகம் டுவிட்டர் பக்கத்தில் இந்தத் தகவலை பதிவிட்டுள்ளது. எனினும், கொரோனா பெருந்தொற்று அதிகம் உள்ள நாடுகளில் இருந்து ஐரோப்பிய யூனியனை சாராத பயணிகள் வருவதற்கு ஐரோப்பிய யூனியன் ஏற்கனவே விதித்த தடை தொடர்ந்து அமலில் உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. ஆண்கள் ஆக்கி: அரைஇறுதியில் இந்தியா-பெல்ஜியம் இன்று மோதல்
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஆக்கி போட்டியின் அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா-பெல்ஜியம் அணிகள் இன்று மோத உள்ளன.
2. ஒலிம்பிக் மகளிர் ஆக்கி போட்டி: இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் ஜெர்மனி வெற்றி
ஒலிம்பிக் மகளிர் ஆக்கி போட்டியில், இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது லீக் போட்டியில் ஜெர்மனி அணி வெற்றிபெற்றுள்ளது.
3. டேபிள் டென்னிஸ்: இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி, மணிகா பத்ரா இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்
ஒலிம்பிக் தொடரில் டேபிள் டென்னிஸ் பிரிவில் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், இந்தியாவின் மணிகா பத்ரா, சுதிர்தா முகர்ஜி ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.
4. ஒலிம்பிக்கில் இந்தியா இன்று...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி வருமாறு:-
5. இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி; இந்தியா முதலில் பேட்டிங்
இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் உள்பட 5 வீரர்கள் அறிமுக வீரர்களாக களம் இறங்கியுள்ளனர்.