உலக செய்திகள்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரிட்டன் பயணம்- ஜி 7 மாநாட்டில் பங்கேற்கிறார் + "||" + Biden arrives in U.K. for G7 summit, part of 8-day Europe trip

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரிட்டன் பயணம்- ஜி 7 மாநாட்டில் பங்கேற்கிறார்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரிட்டன் பயணம்- ஜி 7 மாநாட்டில் பங்கேற்கிறார்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஐரோப்பிய நாடுகளில் 8 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
லண்டன்,

அமெரிக்க  அதிபர்  ஜோ பைடன்  பொறுப்பேற்ற பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக பிரிட்டன் சென்றடைந்துள்ளார்.  ஐரோப்பாவில் 8 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜோ பைடன், பிரிட்டனில் நடைபெறும்  ஜி-7 மாநாட்டில் பங்கேற்கிறார்.  பின்னர்  ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடனான சந்திப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கெடுக்கவுள்ளார்.

அத்துடன் பிரஸ்ஸல்சில் இடம்பெறும் நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடனான பேச்சுக்கள் மற்றும் வரும்  16  தேதி ஜெனீவாவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடனான சந்திப்பு உட்பட முக்கிய நிகழ்வுகளில் ஜோ பைடன் பங்கேற்கிறார்.  புதினுடனான ஜோ பைடனின் சந்திப்பு முக்கியத்தும் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

டொனால் டரம்ப்  அதிபராக இருந்த காலத்தில் அமெரிக்க -ஐரோப்பிய உறவுகளில் சற்று விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் பைடனின் பயணத்தில் இந்த விரிசல்கள் சீர்படுத்தபடும் என நம்பப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து
தமிழ் மக்கள் உள்பட மியான்மர், நேபாளம், தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இன்று புத்தாண்டு கொண்டாடப்படுவதை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
2. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்துக்கு எதிராக 12 மாகாண அரசுகள் வழக்கு
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்துக்கு எதிராக 12 மாகாண அரசுகள் வழக்கு தொடர்ந்துள்ளன.
3. ரஷ்ய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சு
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசி வாயிலாக பேசினார்.