வெள்ளை மாளிகையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியை சந்திக்கிறார், ஜோ பைடன்


வெள்ளை மாளிகையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியை சந்திக்கிறார், ஜோ பைடன்
x
தினத்தந்தி 21 Jun 2021 8:41 PM GMT (Updated: 21 Jun 2021 8:41 PM GMT)

வெள்ளை மாளிகையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சந்திக்கிறார்,

வாஷிங்டன், 

கடந்த சில ஆண்டுகளாகவே ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படை வீரர்களை திரும்பப் பெறும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ஜோ பைடன் நிர்வாகமும் இம்முடிவைத் தொடர்கிறது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்றதற்கு பிறகு ஜோ பைடன் முதல் முறையாக வருகிற 25-ந் தேதி ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேச உள்ளார். 

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப் பெற்று வரும் நிலையில் இரு நாட்டு தலைவர்கள் இடையே நடைபெறும் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

முன்னதாக அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது. கடந்த 2001, செப்டம்பர் 1-ம் தேதி நியூயார்க் நகரில் அல்கொய்தா தீவிரவாதிகள் இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்தனர். அதன் பிறகு ஏற்பட்ட மோதலில் இதுவரை அமெரிக்கா தரப்பில் 2,400 அமெரிக்க வீரர்கள் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் ராணுவத்தினர், பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ வேண்டி, அமெரிக்கா, தலிபான் தீவிரவாதிகளுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை தோஹாவில் கையொப்பமானது குறிப்பிடத்தக்கது.

Next Story