உலக செய்திகள்

ஜப்பானில் நிலச்சரிவு : 19 பேர் மாயம்; 35,500 பேர் வெளியேற்றம் + "||" + Japan: Mudslide sweeps away row of houses near Tokyo, at least 19 missing

ஜப்பானில் நிலச்சரிவு : 19 பேர் மாயம்; 35,500 பேர் வெளியேற்றம்

ஜப்பானில் நிலச்சரிவு : 19 பேர் மாயம்; 35,500 பேர் வெளியேற்றம்
ஜப்பானின் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள அட்டாமி வெப்ப நீரூற்றுகளுக்கு பெயர் பெற்ற ஒரு நகரமாகும். அட்டாமி என்ற பெயருக்கு சூடான கடல் என அர்த்தம்
டோக்கியோ

ஜப்பானில் பெய்த கனமழையால் சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், 35,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர்.இந்த வார தொடக்கத்தில் இருந்து ஜப்பான் முழுவதும் பலத்த மழை பெய்து வருவதால் நாட்டின் மத்திய பகுதியிலும் டோக்கியோவிலும் ஆறுகள் பெருகி நிலச்சரிவு ஏற்படும் அபாயத்தை அதிகரித்துள்ளது.

ஜப்பானின்  தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள அட்டாமி வெப்ப நீரூற்றுகளுக்கு பெயர் பெற்ற ஒரு நகரமாகும். அட்டாமி என்ற பெயருக்கு சூடான கடல் என அர்த்தம்

கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை 10.30 மணியளவில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவால், அப்பகுதியில் இருந்த பல குடியிருப்புகள் அனைத்தும் மண்ணுக்குள் புதைந்தது. குடியிருப்புகளில் வசித்து வந்த 19 பேரைக் காணவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், உயர் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அப்பகுதியில் வசிக்கும் 35,500க்கும் ஏற்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், நிலச்சரிவில் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜப்பானில் அமலில் உள்ள அவசர நிலை பிரகடனம் மேலும் நீட்டிப்பு
கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு காரணமாக ஜப்பானின் 21 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
2. டோக்கியோ பயணிகள் ரெயிலில் கத்திக் குத்து தாக்குதல்; 10 பேர் காயம்
ஜப்பான் தலைநகரும் தற்போது 32-வது ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வரும் நகருமான டோக்கியோவில் கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3. ஜப்பானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு
நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் இல்லை.
4. ஜப்பானின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டி இன்று தொடக்கம்
கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்தியா உள்பட 204 நாடுகளை சேர்ந்த வீரர்- வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
5. ஜப்பானின் 3 மாகாணங்களில் கனமழை: 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்
ஜப்பானின் 3 மாகாணங்களில் கனமழையால் ஏற்பட்டுள்ள பெரு வெள்ளம் காரணமாக, 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.