அமெரிக்காவின் புளோரிடாவில் கட்டிடம் இடிந்து விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 22 ஆக உயர்வு


அமெரிக்காவின் புளோரிடாவில் கட்டிடம் இடிந்து விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 22 ஆக உயர்வு
x
தினத்தந்தி 4 July 2021 3:01 AM GMT (Updated: 4 July 2021 3:01 AM GMT)

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 12 மாடிகளை கொண்ட குடியிருப்பு வளாகம் ஒன்று கடந்த ஜூன் 25 ஆம் தேதி இடிந்து விழுந்தது. 12 மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் அப்பகுதி முழுவதுமே புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்த கோர விபத்தில் மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் இடிபாடுகளில் சிக்கியிருக்கும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 126 பேரை தேடும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இந்த கட்டிடம் 40 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அக்கம் பக்கத்தில் உள்ள குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர். கடல்நீரின் அரிக்கும் விளைவுகளைத் தாங்க கட்டிடங்கள் அவற்றின் கான்கிரீட் முகப்பை அடிக்கடி வலுப்படுத்த வேண்டும் என்று அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். கட்டிட சுவர்களில் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்ய வீட்டு உரிமையாளர்கள் சங்கம் தவறிவிட்டதாக வளாகத்தில் வசிக்கும் ஒருவர் புகார் அளித்ததாக நீதிமன்ற பதிவுகள் காட்டுகின்றன. 

Next Story