ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் நாட்டு மக்களை திரும்ப அழைக்கிறது பிரான்ஸ்


ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் நாட்டு மக்களை திரும்ப அழைக்கிறது பிரான்ஸ்
x
தினத்தந்தி 13 July 2021 3:32 PM GMT (Updated: 13 July 2021 3:32 PM GMT)

ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் நாட்டு மக்கள் வெளியேறுமாறு பிரான்ஸ் அரசு அறிவுறுத்தியுள்ளது.

பாரிஸ்,

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா படைகள் வெளியேறத் தொடங்கியுள்ளன.  ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.   

 இதனால், அங்கு தலீபான் பயங்கரவாதிகள் மீண்டும் ஆதிக்கம் செலுத்தத்தொடங்கி உள்ளனர். பல்வேறு நகரங்களில் அவர்கள் கடந்த சில வாரங்களாக தாக்குதல் நடத்துகின்றனர். காந்தஹார் நகரின் முக்கிய பகுதிகளை அவர்கள் கைப்பற்றி இருக்கிறார்கள். 

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் நாட்டு மக்கள் வெளியேறுமாறு பிரான்ஸ் அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆப்கனிஸ்தானில்  நிலைமை மோசமாவதை அடுத்து, தங்கள் நாட்டு மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஜூலை 17ஆம் தேதி  காபூலில் இருந்து பிரான்சு க்கு சிறப்பு விமானம் இயக்கப்படும் எனவும், அதில் பிரான்ஸ் மக்கள் நாடு திரும்பும் மாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story