பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு சீன என்ஜினீயர் - சீன வீரர்கள் உள்பட 10 பேர் பலி


பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு சீன என்ஜினீயர்  - சீன வீரர்கள் உள்பட 10 பேர் பலி
x
தினத்தந்தி 14 July 2021 9:00 AM GMT (Updated: 14 July 2021 9:00 AM GMT)

வடக்கு பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் சீன என்ஜினீயர் மற்றும் சீன வீரர்கள் உள்பட 10 பேர் பலியானார்கள்.

இஸ்லாமாபாத்

வடகிழக்கு பாகிஸ்தானில் கைபர் பக்துன்வா மாகாணம் கொகிஸ்தான் பகுதியில் தாசு நீர் மின் நிலையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக பெர்சீம் முகாமில் இருந்து இன்று காலை ஒரு பஸ்சில் சீன என்ஜினீயர்கள் , சீன வீரர்கள் மற்றும் தொழிலாளர்கள் 30 பேர் பயணம் செய்து கொண்டு இருந்தனர். 

அப்போது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் சீன என்ஜினீயர் மற்றும் சீன வீரர்கள் உள்பட 10 பேர் பலியானர்கள்.  பலர் காயம் அடைந்துள்ளனர் அவர்கள் தாசு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களின் பலரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதால்  பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையில், சீன நாட்டினர் உட்பட 10 பலியான  பஸ் குண்டுவெடிப்பு குறித்து முழுமையாக விசாரணை நடத்த பாகிஸ்தானை சீனா கேட்டுக் கொண்டுள்ளது.

Next Story