ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் கன மழை-வெள்ளம்: பலி எண்ணிக்கை 120-ஆக உயர்வு


Photo Credit: AFP
x
Photo Credit: AFP
தினத்தந்தி 17 July 2021 1:27 AM GMT (Updated: 17 July 2021 1:27 AM GMT)

ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம் மற்றும் ஜெர்மனியில் கனமழை கொட்டி தீர்த்தது.


ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில்  பெய்து வரும் கனமழை காரணமாக, பல்வேறு பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ள நீரில் முழ்கியும் கட்டடங்கள் இடிந்து விழுந்தும் உயிரிந்தவா்களின் எண்ணிக்கை 120-ஐத் தாண்டியுள்ளது.

கன மழை காரணமாக ஜெர்மனியில் மட்டும் சுமாா் 1,300 பேர் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது. சாலைகள் சேதமடைந்துள்ளதாலும் தகவல் தொடா்புகள் துண்டிக்கப்பட்டதாலும் அவா்களைத் தொடா்பு கொள்ள முடியாத நிலை உள்ளதாக அதிகாரிகள் கூறினா். ராணுவம் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. 

அண்டை நாடான பெல்ஜியத்தில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 12-ஆக உயா்ந்துள்ளது. அந்த நாட்டில் 5 பேரைக் காணவில்லை என்று உள்ளூா் ஊடகங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன. நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வசிக்கும் பயணங்களை தவிர்க்குமாறு பெல்ஜியம் அரசு அறிவுறுத்தியுள்ளது. 

Next Story