உலக செய்திகள்

இங்கிலாந்து சுகாதாரத்துறை மந்திரிக்கு கொரோனா தொற்று + "||" + UK Health Minister Tests Covid+, Had Taken Both Doses Of Vaccine

இங்கிலாந்து சுகாதாரத்துறை மந்திரிக்கு கொரோனா தொற்று

இங்கிலாந்து சுகாதாரத்துறை மந்திரிக்கு கொரோனா தொற்று
கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொண்ட இங்கிலாந்து சுகாதாரத்துறை மந்திரி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
லண்டன்,

இங்கிலாந்து சுகாதாரத்துறை மந்திரி சாஜித் ஜாவித்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். லேசான அறிகுறிகளுடன் தொற்று பாதித்துள்ள அவர், வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். கொரோனா தடுப்பூசிகளின் இரு டோஸ்களையும் சாஜித் ஜாவித்  போட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

வெள்ளிக்கிழமை தான், பிரதமர்  போரிஸ் ஜான்சன் இல்லத்திற்கு ஜாவித் சென்றதாக கூறப்படுகிறது. எனினும், பிரதமர் போரிஸ் ஜான்சனை நேரடியாக ஜாவித் சந்தித்தாரா என்பது பற்று அவரது செய்தி தொடர்பாளர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. 

கொரோனா கட்டுப்பாடுகளை வரும் திங்கள்கிழமை முதல் தளர்த்த இங்கிலாந்து அரசு தயாராகி வருகிறது. இங்கிலாந்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உச்சம் பெற்றுள்ள நிலையில், கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு மருத்துவ நிபுணர்கள் தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. எனினும், இதையும் மீறி கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு இங்கிலாந்து அரசு தயாராகி வருகிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் புதிதாக 29,612 பேருக்கு கொரோனா பாதிப்பு
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29,612 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. ‘நிகழ்ச்சி முடிந்து விட்டது’ தடுப்பூசி விவகாரம் குறித்து ராகுல் காந்தி விமர்சனம்
மோடி பிறந்த நாளையொட்டி செப்டம்பர் 17 ஆம் தேதி 2.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி புதிய சாதனை படைக்கப்பட்டது.
3. இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74 லட்சத்தை தாண்டியது!
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,144 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. ஒரே நாளில் 2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல் வந்துவிட்டது; பிரதமர் மோடி கிண்டல்
ஒரே நாளில் 2.5 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டதால் இங்கு ஒரு கட்சிக்கு (காங்கிரஸ்) நள்ளிரவில் காய்ச்சல் வந்து விட்டது என பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்தார்.
5. இங்கிலாந்தில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 30,597 பேருக்கு தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,597 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.