டெல்டா வைரசுக்கு எதிராக பைசர், அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசிகள் பலன் தரும்: ஆய்வு முடிவு


டெல்டா வைரசுக்கு எதிராக பைசர், அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசிகள் பலன் தரும்: ஆய்வு முடிவு
x
தினத்தந்தி 22 July 2021 8:06 PM GMT (Updated: 22 July 2021 8:06 PM GMT)

இந்தியாவில் முதன்முறையாக காணப்பட்ட டெல்டா வைரஸ், உலக நாடுகளையெல்லாம் உலுக்கி வருகிறது. ஏற்கனவே 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ள இந்த வைரஸ், எதிர்காலத்தில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்த டெல்டா வைரசுக்கு எதிராக 2 ‘டோஸ்’ பைசர் அல்லது அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசிகள் பலன் அளிக்கும் என்று ‘யு.எஸ். நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆப் மெடிசின்’ பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.டெல்டா வைரசுக்கு எதிராக பைசர் தடுப்பூசி 88 சதவீதமும், ஆல்பா வைரசுக்கு எதிராக 93.7 சதவீதமும் பலன் தரும் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

அதே நேரத்தில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி, டெல்டா வைரசுக்கு எதிராக 67 சதவீதமும், ஆல்பாவுக்கு எதிராக 74.5 சதவீதமும் பலன் அளிக்கும் என தெரிய வந்துள்ளது.

Next Story