உலக செய்திகள்

மலேசியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா; 17,045 பேருக்கு பாதிப்பு + "||" + Corona reaches new peak in Malaysia; 17,045 people were affected

மலேசியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா; 17,045 பேருக்கு பாதிப்பு

மலேசியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா; 17,045 பேருக்கு பாதிப்பு
மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டுள்ளது.


கோலாலம்பூர்,

மலேசியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சம் தொட்டு வருகிறது.  இந்த எண்ணிக்கை நேற்று 15,902 ஆகவும், நேற்று முன்தினம் 15,573 ஆகவும் இருந்தது.

மலேசியாவில் தேசிய அளவிலான பொதுமுடக்கம் அமலில் உள்ளது.  எனினும், தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த 13ந்தேதி முதல் (11,079 பேர்) தொடா்ந்து 10 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17,045 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால், கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சம் தொட்டுள்ளது.

நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,13,438 ஆக உயர்வடைந்து உள்ளது.  92 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதுவரை மொத்த உயிரிழப்பு 7,994 ஆக உயர்வடைந்து உள்ளது.

இதேபோன்று 8,44,541 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.  இதுவரை அந்நாட்டில் 4 லட்சத்து 17 ஆயிரத்து 738 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.
தொடர்புடைய செய்திகள்

1. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.13 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20,80 கோடியை தாண்டியது.
2. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20,75 கோடியை தாண்டியது.
3. இங்கிலாந்தில் 75 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,460 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. இங்கிலாந்தில் புதிதாக 31,564 கொரோனா பாதிப்பு: மேலும் 203 பேர் பலி
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,564 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,97 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20,64 கோடியை தாண்டியது.