அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி தரும் நோய் எதிர்ப்புசக்தி 10 வாரங்களில் பாதியாக குறைகிறது; ஆய்வு முடிவு


அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி தரும் நோய் எதிர்ப்புசக்தி 10 வாரங்களில் பாதியாக குறைகிறது; ஆய்வு முடிவு
x
தினத்தந்தி 27 July 2021 8:59 PM GMT (Updated: 27 July 2021 8:59 PM GMT)

பைசர், அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசிகளால் வருகிற கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி 10 வாரங்களில் பாதியாகக்குறைந்து விடுவதாக இங்கிலாந்து ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சரி பாதிக்கும் மேல்...
கொரோனா தடுப்பூசிகளால் வருகிற நோய் எதிர்ப்புச்சக்தி பற்றி இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழக கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தி வந்தனர். அதன் முடிவுகளை இப்போது வெளியிட்டுள்ளனர்.

அது வருமாறு:-

* பைசர் மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசிகளை போட்ட 6 வாரங்களுக்கு பிறகு அதனால் உருவான நோய் எதிர்ப்புச்சக்தி குறையத்தொடங்குகிறது. 10 வாரங்களில் சரி பாதிக்கும் மேலாக நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்து விடுகிறது.

* இதனால் புதிய வைரஸ்களுக்கு எதிரான தடுப்பூசியின் பாதுகாப்பு விளைவுகள் குறையத் தொடங்கும் என்பது கவலை தருவதாக அமைந்துள்ளது.

2,3 மாதங்களில் குறைகிறது

* பைசர் தடுப்பூசியின் 2 டோஸ்கள், அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியின் 2 டோஸ்களை விட அதிகளவில் நோய் எதிர்ப்புச்சக்தியை தருகின்றன.

* கொரோனா தொற்றுக்கு முந்தைய எதிர்ப்புச்சக்தியின் அளவை விட, தடுப்பூசி போட்ட பின்னர் வருகிற எதிர்ப்புச்சக்தியின் அளவு அதிகம்.

* பைசர் மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசிகளின் 2 டோஸ்களால் வருகிற நோய் எதிர்ப்புச்சக்தி ஆரம்பத்தில் அதிகமாக உள்ளது. இதுதான் தீவிரமான கொரோனாவுக்கு எதிரான அதிக பாதுகாப்பைத்தருகிறது. ஆனால் 2, 3 மாதங்களில் இந்த எதிர்ப்புச்சக்தி குறைகிறது.

இவ்வாறு அந்த ஆய்வு முடிவு கூறுகிறது.

அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசிதான் இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் புனே இந்திய சீரம் நிறுவனத்தால் தயாரித்து வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story