கொரோனா பாதிப்பு; இங்கிலாந்து நாட்டில் மார்ச் 17க்கு பின் 131 பேர் உயிரிழப்பு


கொரோனா பாதிப்பு; இங்கிலாந்து நாட்டில் மார்ச் 17க்கு பின் 131 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 28 July 2021 12:58 AM GMT (Updated: 28 July 2021 12:58 AM GMT)

இங்கிலாந்து நாட்டில் மார்ச் 17ந்தேதிக்கு பின் அதிக அளவாக கொரோனா பாதிப்புக்கு 131 பேர் உயிரிழந்து உள்ளனர்.




லண்டன்,

அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.  இதற்காக கொரோனா தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன.

இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த 19ந்தேதியில் இருந்து நாடு முழுவதும் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து அமல்படுத்தினார்.  இதனால் முக கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது போன்ற விசயங்கள் கட்டாயம் இல்லை என அறிவிப்பு வெளியானது.

இதனால், தொற்று பரவல் ஏற்பட கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை செய்திருந்தனர்.  எனினும் இந்த நடைமுறை அமலானது.

இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டில் நேற்று ஒரே நாளில் 23,511 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  அந்நாட்டில், 4.65 கோடி பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.  3.69 கோடி பேருக்கு 2வது டோஸ் செலுத்தப்பட்டு உள்ளது என சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், கடந்த மார்ச் 17ந்தேதிக்கு பின் அந்நாட்டில் மிக அதிக அளவாக 131 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 1,29,303 ஆக உயர்ந்து உள்ளது.


Next Story