உலக செய்திகள்

ஒலிம்பிக்கை மிரட்டும் கொரோனா ; டோக்கியோவில் ஒரே நாளில் 3,177 பேர் பாதிப்பு + "||" + Tokyo reports record 3,177 coronavirus cases

ஒலிம்பிக்கை மிரட்டும் கொரோனா ; டோக்கியோவில் ஒரே நாளில் 3,177 பேர் பாதிப்பு

ஒலிம்பிக்கை மிரட்டும் கொரோனா ; டோக்கியோவில் ஒரே நாளில்  3,177 பேர் பாதிப்பு
ஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோவில் அதிகரித்து வரும் கொரோனா பதிப்பு ஒரே நாளில் 3,177 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
டோக்கியோ

கொரோனா காலகட்டத்தில் முக்கிய விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. டோக்கியோ  நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கு  அவசரகால நிலைமை அமல்படுத்தப்பட்டு உள்ளது. 

டோக்கியோ நகரில் நேற்று  ஒரே நாளில் 2848 புதிய  கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இன்று  3,177 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகி உள்ளது இத்தகவலை  டோக்கியோ பெருநகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.  இது நேற்றைய பாதிப்பை விட 329 அதிகமாகும்

அவர்களின் 20 வயதிற்குட்பட்டவர்கள் (1,078 பாதிப்புகள்), அவர்களின் 30 வயக்குட்பட்டவர்கள் (680) மற்றும் 40க்குட்பட்டவர்கள் (485)388 பாதிப்புகள்  19 வயதிற்குட்பட்டவர்கள்.

டோக்கியோவில் கடுமையான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆகும், இது செவ்வாய்க்கிழமையை விட இரண்டு குறைந்துள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒலிம்பிக்கைப் பொறுத்தவரை கொரோனா பாதிப்பு 169 ஆக அதிகரித்துள்ளது. இதில் வீரர்கள், அதிகாரிகள், நிர்வாகிகளும் அடங்குவர்.

இந்த ஒலிம்பிக் போட்டிகளே அங்கு எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட நிலையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அடங்காத கொரோனா 2வது நாளாக அதிகபட்ச பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாசிட்டிவ் அதிகரித்துக் கொண்டே செல்வதால் அங்கு ஒலிம்பிக் போட்டிகள் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் குறைந்து பீதி தான் அதிகரித்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,97 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20,64 கோடியை தாண்டியது.
2. இங்கிலாந்தில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 36,100 பேருக்கு தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36,100 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. டெல்லியில் மேலும் 20 பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. ஒடிசாவில் மேலும் 510 பேருக்கு கொரோனா - 6 பேர் உயிரிழப்பு
ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 510 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. பிலிப்பைன்சில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 19,271 பேருக்கு தொற்று
பிலிப்பைன்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,271 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.