நியூயார்க் நகரில் பொது இடங்களுக்கு வர தடுப்பூசி பாஸ் கட்டாயம்


Image courtesy : Noam Galai | Getty Images
x
Image courtesy : Noam Galai | Getty Images
தினத்தந்தி 4 Aug 2021 11:10 AM GMT (Updated: 4 Aug 2021 11:10 AM GMT)

அமெரிக்க நகரங்களில் முதன்முதலாக நியூயார்க்கில் பொது இடங்களுக்கு வர தடுப்பூசி பாஸ் முறை கொண்டு வரப்படுகிறது.

நியூயார்க்

அமெரிக்காவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், Key to NYC என்ற பெயரிலான இந்த தடுப்பூசி பாஸ் முறை வரும் 16 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என நியூயார்க் நகர மேயர் பில் டி பிளாசியோ அறிவித்துள்ளார்.

அதன்படி உணவகங்கள், உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு வருபவர்கள் தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான ஆதாரத்தை காண்பிப்பது கட்டாயமாகும். இதுவே தடுப்பூசி பாஸ் என்று அழைக்கப்படுவதாகவும் மேயர் தெரிவித்துள்ளார்.

குறைந்தபட்சம் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பாஸ் வைத்திருக்க வேண்டும்.


Next Story