உலக செய்திகள்

ஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோ நகரில் மர்ம நபர் தாக்குதல்;மாணவி உள்பட 10 பேர் காயம் + "||" + 10 passengers stabbed on Tokyo train; suspect detained

ஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோ நகரில் மர்ம நபர் தாக்குதல்;மாணவி உள்பட 10 பேர் காயம்

ஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோ நகரில் மர்ம நபர் தாக்குதல்;மாணவி உள்பட 10 பேர் காயம்
ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வரும் டோக்கியோ நகரில் ரெயிலில் பயணித்த மர்ம நபர் கத்தியால் தாக்கியதில் 10 பேர் காயமடைந்தனர்.
டோக்கியோ

ஜாப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் 2020ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விளையாட்டு போட்டி நாளையுடன் நிறைவடைகிறது. ஒலிம்பிக் போட்டி  காரணமாக டோக்கியோ நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், நேற்று  இரவு டோக்கியோ ஓடக்யூ ரெயில் நிலையத்தில் பயணிகள் ரெயிலில் பயணித்த நபர் ஒருவர், சக பயணிகளை கத்தியால் தாக்க தொடங்கியுள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் கத்தி கூச்சலிட்டு ஓடி உள்ளனர்.  இதையடுத்து ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.  பல்கலைக்கழக மாணவி ஒருவர் கடுமையான காயம் அடைந்து  சிகிச்சை பெற்று வருகிறார். அந்த மாணவியின்  முதுகு மற்றும் மார்பில் பல இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 36 வயது நபரை போலீசார் கைது செயது உள்ளனர். அவரது பெயர் யூசுக்கே சுஷிமா இவர் கனகாவா பிராந்தியத்தின் கவாசாகி பகுதியைச் சேர்ந்தவர். அவரிடம் நடத்திய விசாரணையில், ரெயிலில் சிரித்தப்படி மகிழ்ச்சியாக இருந்த பெண்களை பார்த்ததும் அவர்களை கொல்ல வேண்டும் என்று தோன்றியதாக கூறியுள்ளார். மேலும், மகிழ்ச்சியாக பெண்களை பார்த்தால் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் கடந்த 6 ஆண்டுகளாக இருந்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக கருதப்படும் ஜப்பானில் கடந்த  சில ஆண்டுகளாகவே கத்தி மூலம் தாக்குதல் நடத்துவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கஷ்ட காலத்தில் உதவிய 150 லாரி டிரைவர்களுக்கு விருந்து ; மனிதே நேய மங்கை மீராபாய் சானு
பளுதூக்குதல்தான் தன்னுடைய எதிர்காலம் என மீரா பாய் சானு முடிவு செய்தாலும் பயிற்சியை விட அதற்காக அவர் மேற்கொள்ளும் பயணம் மிகவும் சிரமத்தை கொடுத்துள்ளது.
2. டோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் குத்து சண்டை காலிறுதியில் இந்திய வீராங்கனை வெற்றி; பதக்கம் உறுதி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் மகளிர் குத்து சண்டை காலிறுதியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெற்றி பெற்று பதக்கம் உறுதி செய்துள்ளார்.
3. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் இந்திய வீரர் தோல்வி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் இந்திய வீரர் அவினாஷ் முகுந்த் சேபிள் தோல்வி அடைந்துள்ளார்.
4. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி; துப்பாக்கி சுடுதலில் இந்திய ஜோடி ஸ்டேஜ் 2க்கு தகுதி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் மானு பாக்கர் மற்றும் சவுரப் சவுத்ரி இணை ஸ்டேஜ் 2க்கு தகுதி பெற்றுள்ளது.
5. ஒலிம்பிக்கில் இந்தியா இன்று...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி வருமாறு:-