உலக செய்திகள்

மனிதர்களைப் போல பற்கள்,செம்மறி ஆட்டைப் போன்ற தலை மீனவர் வலையில் சிக்கிய அதிசயமீன் + "||" + Fisherman Catches Fish With Human-Like Teeth at North Carolina's Jennette's Pier

மனிதர்களைப் போல பற்கள்,செம்மறி ஆட்டைப் போன்ற தலை மீனவர் வலையில் சிக்கிய அதிசயமீன்

மனிதர்களைப் போல பற்கள்,செம்மறி ஆட்டைப் போன்ற தலை மீனவர் வலையில் சிக்கிய அதிசயமீன்
மீனின் தலை செம்மறியாட்டு தலையை ஒத்திருப்பதால் ஷீப்ஸ்ஹெட் (ஆட்டுதலை)என பெயரைப் பெற்றது.

வடகரோலினா

அமெரிக்காவின் வட கரோலினாவில் உள்ள ஜென்னட்ஸ் பியர் என்ற மீன்பிடி துறையில் ஒரு மீனவரின் வலையில் அதிசய மீன் ஒன்று சிக்கி உள்ளது.அந்த மீன் முதலில் பிடிப்பட்ட போது ஒரு வழக்கமான மீன் தான் பிடிபட்டுள்ளது என்று நினைத்தவர்களுக்கு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. ஆனால் பிடிபட்ட மீனினுடைய வாயின் வித்தியாசமான அம்சங்களைக் கண்டு மக்கள் மிகவும் வியப்படைந்துள்ளனர்.

வட கரோலினாவின் மீன்பிடி துறையில் வழக்கமாக மீன் பிடிக்கும் நாதன் மார்ட்டின் பிடித்துள்ளார்.  இந்த வகை கடல் உயிரினத்தை தான் நீண்ட காலமாக தேடி கொண்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். அதன் வாயில் பற்கள் நிறைந்த மீனின் முகத்தை நேரடியாக பார்த்த போது தனது பல நாள் காத்திருப்பு முடிவுக்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.

மீனின் தலை செம்மறி ஆட்டு தலையை ஒத்திருப்பதால் ஷீப்ஸ்ஹெட்  (ஆட்டுதலை)என பெயரைப் பெற்றது. வித்தியாசமான நீர்வாழ் விலங்கின் போட்டோவை,  மீன்பிடி துறை தனது அதிகாரபூர்வ சமூக வலைதளத்தில் பதிவு செய்து உள்ளது. 

சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட  சில மணி நேரங்களிலேயே  அதிசய மீனின் போட்டோ வைரலாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நாடாளுமன்றத்தில் புகுந்த எலி...! பெண் எம்.பி.க்கள் அலறல் கூட்டம் ஒத்திவைப்பு
ஸ்பெயின் நாட்டின் அந்தலுசியன் நாடாளுமன்றத்தில் எலி புகுந்து ஓடியதால் எம்.பிக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
2. நவீன வசதிகளுடன் உலகில் 196 அடி ஆழம் உள்ள டீப் டைவ் துபாய் நீச்சல் குளம் திறப்பு
நவீன வசதிகளுடன் உலகில் அதிகம் ஆழம் கொண்ட 196 அடி ஆழ டீப் டைவ் துபாய் நீச்சல் குளம் திறக்கப்பட்டு உள்ளது.
3. உலகிலேயே மிகவும் குள்ளமான பசு ; ஊரடங்கை பொருட்படுத்தாமல் காண கூடும் மக்கள்
வங்காள தேசத்தில், 51 செ.மீ., உயரமுள்ள உலகின் குள்ளமான பசுவை ஆயிரக்கணக்கானோர் ஊரடங்கை பொருட்படுத்தாமல் காண வருகின்றனர்.
4. விருந்தில் ஆட்டுக்கறி இல்லை: கோபத்தில் நிச்சயித்த பெண்ணுக்கு பதிலாக வேறொரு பெண்ணை மணந்த மணமகன்
திருமணத்தின் போது உறவினர்களுக்கு ஆட்டுக்கறி விருந்து போடாததால் ஆத்திரம் அடைந்த மணமகன், மணப்பெண்ணுக்கு பதிலாக வேறொரு பெண்ணை மணந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
5. 28 மணி நேரத்தில் கட்டிமுடிக்கப்பட்ட 10 மாடி கட்டிடம் 4 நிமிட வீடியோ
சீனாவில் 28 மணி நேரத்தில் கட்டிமுடிக்கப்பட்ட 10 மாடி கட்டிடம் அதுகுறித்து விளக்கும் 4 நிமிட வீடியோ