பிலிப்பைன்ஸ் சுகாதாரத் துறை ஊழியர்கள் திடீர் போராட்டம்


பிலிப்பைன்ஸ் சுகாதாரத் துறை ஊழியர்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 1 Sep 2021 12:57 PM GMT (Updated: 1 Sep 2021 12:57 PM GMT)

பிலிப்பைன்ஸ் சுகாதாரத் துறை அலுவலகத்திற்கு வெளியே சுகாதாரப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

மணிலா

கொரோனாவின் தீவிரம் பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில்  இதுவரை 20.03 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 14,216 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  ஒட்டுமொத்தமாக பாதித்தவர்களின் எண்ணிக்கை 20,03,955 ஆக உயர்ந்து உள்ளது.மேலும் இதுவரை தொற்றால் 33,533 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

11 கோடி பேர் மக்கள் தொகை கொண்ட பிலிப்பின்ஸ் நாட்டில் 1.71 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பிலிப்பைன்சில் சுகாதார துறை ஊழியர்கள் திடீர் போரட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். கொரோனா நோய்த்தொற்றுகளுக்கு மத்தியில் சிறந்த ஊதியம் மற்றும் சலுகைகளைக் கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இன்று பிலிப்பைன்ஸ் சுகாதாரத் துறை  அலுவலகத்திற்கு வெளியே சுகாதாரப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

Next Story