உலக செய்திகள்

அமெரிக்காவில் ஒரே நாளில் 1.76 லட்சம் பேருக்கு கொரோனா + "||" + World wide coid 19 updates on sep 05

அமெரிக்காவில் ஒரே நாளில் 1.76 லட்சம் பேருக்கு கொரோனா

அமெரிக்காவில் ஒரே நாளில் 1.76 லட்சம் பேருக்கு கொரோனா
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,76,645 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,

அமெரிக்காவில், கடந்த ஜூன் மாதத்தில் 11,000 என்ற நிலையில் பதிவாகி வந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு, தற்போது ஆகஸ்ட் இறுதியில் 1.50 லட்சத்தை கடந்து  அதிர வைத்தது. தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழக்கும் சூழலும் அங்கு நிலவுகிறது. இதனால், மருத்துவமனைகளில் 78% படுக்கைகள் நிரம்பியுள்ளன.

தென் அமெரிக்காவின் பல பகுதிகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த அலையில், பல லட்ச குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அமெரிக்க அரசு சூழலை கட்டுப்படுத்த முடியாமல் திணறிவருகிறது. மக்களிடையே, "தடுப்பூசி போடாவிடில் சூழல் மேலும் மோசமாகும்" எனக்கூறி தடுப்பூசி போடுவதை அதிகரிக்கவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில்  1,76,645 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால்  ஒரே நாளில் 1,490- பேர் உயிரிழந்தனர். தொற்று பாதிப்பில் இருந்து 61, 538- பேர் குணம் அடைந்துள்ளனர்.  அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 06 லட்சத்து 97 ஆயிரத்து 726- ஆக உயர்ந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் சிறை கைதிகள் 20 பேருக்கு கொரோனா
மராட்டியம், சிறை கைதிகள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இந்தியாவில் 230 நாட்களில் இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா பாதிப்பு குறைவு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.
3. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24.14 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 21.86 கோடியை தாண்டியது.
4. அமெரிக்காவில் இதுவரை 40.8 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை ஒரு கோடியே 50 லட்சம் பேர் 3-வது டோஸ் ‘பூஸ்டர்’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. இங்கிலாந்தில் மேலும் உயர்ந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 45,140 பேருக்கு தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,140 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.