உலக செய்திகள்

தூங்கிய அதிகாரிகள்...! தப்பிய சிறைக் கைதிகள்...! + "||" + Israeli guard slept through Palestinian prisoners’ escape: Probe

தூங்கிய அதிகாரிகள்...! தப்பிய சிறைக் கைதிகள்...!

தூங்கிய அதிகாரிகள்...!  தப்பிய சிறைக் கைதிகள்...!
இஸ்ரேலிய சிறையில் இருந்து பாலஸ்தீன கைதிகள் தப்பியதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் தூங்கியதே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
கில்போவா

இஸ்ரேலிய நாட்டில் கில்போவா என்ற இடத்தில் அதி உயர் பாதுகாப்பு கொண்ட சிறைச்சாலையை இஸ்ரேல் அமைத்துள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு இந்த சிறையில் இருந்து சுரங்கம் அமைத்து 6 பாலஸ்தீன கைதிகள் தப்பிச் சென்றனர். கைதிகள் சுரங்கப் பாதையில் இருந்து சுற்றுச் சுவரைத் தாண்டி வெளியேறும் காட்சிகளுடன்,  அதனைக் கண்காணிக்கும் அதிகாரிகள் தூங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. 

தப்பி சென்றவர்களில்  ஐந்து பேர் 'இஸ்லாமிக் ஜிகாத்' எனும் அமைப்பின் உறுப்பினர்கள்; ஒருவர் அல்-அக்சா தியாகிகள் படை எனும் தீவிரவாதக் குழுவின் முன்னாள் தலைவர்.

சிறையில் இருந்த ஒரு போஸ்டருக்கு பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த துருப்பிடித்த ஸ்பூன் ஒன்றைக் கொண்டு இவர்கள் இந்த சுரங்கத்தை தோண்டி உள்ளனர்.

இவர்கள் சிறை அறையின் கழிவறையில் தோண்டிய குழி, சிறையின் பின்புறம்  இருந்த ஒரு வெற்று இடத்தை சென்றடைந்தது.

தரைக்கு அடியில் இருந்த காலி இடத்தை தாங்கள் தோண்டிய குழி மூலம் சென்றடைந்த அந்த ஆறு பேரும் அங்கிருந்து ஒரு சுரங்கத்தை தோண்டி சிறையின் சுற்றுச் சுவருக்கு வெளியே உள்ள ஒரு சாலையில் வரை தோண்டி அதன் மூலம் தப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இஸ்ரேலுக்குள் நுழைய அனுமதி
உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நவம்பர் 1ம் தேதி முதல் இஸ்ரேலுக்குள் அனுமதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
2. பக்ரைன் நாட்டில் இஸ்ரேல் தூதரகம் திறப்பு
பக்ரைன் தலைநகர் மனாமாவில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு விமானம் சென்றது.
3. இஸ்ரேல் சிறையில் இருந்து தப்பிய பாலஸ்தீன கைதிகளில் கடைசி 2 பேரும் கைது
இஸ்ரேல் சிறையில் இருந்து தப்பிய 6 பாலஸ்தீன கைதிகளில் பிடிபடாமல் இருந்து மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. ஹமாஸ் ஆயுதக்கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்
காசா முனையில் உள்ள ஹமாஸ் அமைப்பின் ஆயுதக்கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது.
5. இஸ்ரேல் சிறையில் இருந்து தப்பிய 6 பாலஸ்தீன கைதிகளில் 4 பேர் பிடிபட்டனர்...
சிறையில் இருந்து தப்பிய 6 பாலஸ்தீன கைதிகளில் 4 பேரை மீண்டும் பிடித்துவிட்டதாக இஸ்ரேல் போலீசார் தெரிவித்துள்ளனர்.