உலக செய்திகள்

ஈராக் விமான நிலையம் மீது 'டிரோன்’ மூலம் தாக்குதல் + "||" + Iraq’s Erbil airport targeted in drone attack: Kurdish officials

ஈராக் விமான நிலையம் மீது 'டிரோன்’ மூலம் தாக்குதல்

ஈராக் விமான நிலையம் மீது 'டிரோன்’ மூலம் தாக்குதல்
ஈராக் விமான நிலையம் மீது ‘டிரோன்’ மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாக்தாத்,

ஈராக் நாட்டின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக குர்திஷ் மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தின் தலைநகர் எர்பிளில் சர்வதேச விமான நிலையம் உள்ளது.

இந்த விமான நிலையத்தில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் தங்கள் படையினரை நிலைநிறுத்தி வைத்துள்ளன. ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை அழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், எர்பிள் விமான நிலையத்தை குறிவைத்து இன்று டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ‘டிரோன்’ மூலம் வெடிகுண்டுகள் விமான நிலையம் மீது வீசப்பட்டன. இந்த தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்ற முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

ஆனாலும், இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வருவதாக குர்திஷ் மாகாண பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். ஐ.எஸ். பயங்கரவாதிகள் அல்லது ஈரான் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதலில் போலீஸ் அதிகாரிகள் 12 பேர் பலி
ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தை அமெரிக்க படைகளின் உதவியோடு ஈராக் ராணுவம் ஒடுக்கியது.
2. ஈராக்கில் குர்து இன போராளிகள் மீது துருக்கி ராணுவம் வான்தாக்குதல்; 18 பேர் பலி
ஈராக், ஈரான், சிரியா மற்றும் அர்மீனியா போன்ற நாடுகளின் எல்லைப் பகுதிகளில் மலைப்பாங்கான இடங்களில் வசிப்போர் தான் குர்திஷ்கள். குர்து மொழி பேசும் இவர்களுக்கென்று தனி நாடு கிடையாது.
3. ஈராக்கில் அமெரிக்காவின் போர் நடவடிக்கை இந்த ஆண்டு இறுதியில் நிறைவு: ஜனாதிபதி ஜோ பைடன்
ஐ.எஸ். பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிடுவதற்காக அமெரிக்கா கடந்த 2014-ம் ஆண்டு ஈராக் நாட்டுக்கு தனது படைகளை அனுப்பியது. அமெரிக்க படைகளின் உதவியுடன் ஈராக் ராணுவம் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தை கட்டுக்குள் கொண்டுவந்தது. ஐ.எஸ். பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதாக கடந்த 2017-ம் ஆண்டு‌ ஈராக் அறிவித்தது.
4. ஈராக்கில் குண்டு வெடிப்பு- 30 பேர் பலி, 50 பேர் காயம்
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
5. பாக்தாத் அமெரிக்க தூதரகத்தின் மீது அதிகாலை ராக்கெட் தாக்குதல்
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது இன்று அதிகாலை ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது.