உலக செய்திகள்

அமெரிக்காவில் 400 ஏக்கர் அளவிற்கு பரவிய காட்டுத்தீ + "||" + Wildfire burns nearly 400 acres near Castaic, prompting closure of 5 Freeway

அமெரிக்காவில் 400 ஏக்கர் அளவிற்கு பரவிய காட்டுத்தீ

அமெரிக்காவில் 400 ஏக்கர் அளவிற்கு பரவிய காட்டுத்தீ
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள காடுகளில் பற்றி எரியும் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத் துறையினர் திணறி வருகின்றனர்.
வாஷிங்டன்,

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸின் வடகிழக்குப் பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தொடக்கத்தில் 5 ஏக்கர் அளவிலான காட்டுப் பகுதியில் பற்றி எரிந்த தீயானது, சில மணி நேரத்தில் சுமார் 400 ஏக்கர் அளவிற்கு பரவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காட்டுத் தீ பற்றி எரியும் பகுதியை ஒட்டியுள்ள சாலை தற்போது மூடப்பட்டுள்ளதாகவும், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட இரு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எப்படி தீ பற்றியது என்பது தெரியாத நிலையில் வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.