ஆப்கானிஸ்தானில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப தலீபான்கள் தடை


ஆப்கானிஸ்தானில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப  தலீபான்கள் தடை
x
தினத்தந்தி 21 Sep 2021 4:01 PM GMT (Updated: 2021-09-21T21:53:52+05:30)

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட்டை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்ப தலிபான் அரசு தடை விதித்துள்ளது.

புதுடெல்லி,

ஆப்கானிஸ்தானில் ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். முந்தைய ஆட்சி போல இல்லாமல் மிதமான கொள்கைகளுடன் ஆட்சி நடத்துவோம் என அறிவித்த தலீபான்கள், அதற்கு நேர்மாறாக தற்போது செயல்பட்டு வருகின்றனர். 

புதிதாக அமைக்கப்பட்ட கேபினட்டில் பெண்களுக்கு இடம் அளிக்காத தலீபான்களின் செயலுக்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.  இந்த நிலையில், மைதானத்தில் பெண் பார்வையாளர்கள் இருப்பதால் ஐபிஎல் போட்டிகளை தங்கள் நாட்டில் ஒளிபரப்ப அனுமதிக்க முடியாது என்று தலீபான்கள் அரசு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 

 இது குறித்து ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் முன்னாள் செய்தித் தொடர்பாளரும், அந்த நாட்டு செய்தி நிறுவனம் ஒன்றுடன் இணைந்து பணியாற்றி வரும் ஊடகவியலாளருமான பவாத் அமான் இதுகுறித்து டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

ஆப்கானிஸ்தானில் ஐபிஎல் கிரிக்கெட் ஒளிபரப்புக்குத் தலிபான் தடை விதித்துள்ளது. பெண்கள் நடனமாடுவதாலும், மைதானங்களில் பெண் பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்கள் இருப்பதாலும் அதை ஒளிபரப்பக் கூடாது என்று ஆப்கன் ஊடகங்களை தலிபான் எச்சரித்துள்ளது” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story