உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பிரபல பத்திரிகையாளர் உள்பட 4 பேர் சுட்டு கொலை + "||" + Four people have been shot dead, including a prominent journalist in Afghanistan

ஆப்கானிஸ்தானில் பிரபல பத்திரிகையாளர் உள்பட 4 பேர் சுட்டு கொலை

ஆப்கானிஸ்தானில் பிரபல பத்திரிகையாளர் உள்பட 4 பேர் சுட்டு கொலை
ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் பிரபல பத்திரிகையாளர் உள்பட 4 பேர் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.

ஜலாலாபாத்,

ஆப்கானிஸ்தானின் கிழக்கே நங்கர்ஹார் மாகாணத்தில் ஜலாலாபாத் நகரில் கார் ஒன்றில் ஏறிய மர்ம நபர்கள் சிலர், திடீரென ஆட்டோவில் சென்ற நபர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இந்த சம்பவத்தில் பிரபல பத்திரிகையாளர் மற்றும் விரிவுரையாளரான சையது மரூப் சதாத் என்பவர் உள்பட 4 பேர் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.

அவர்களில் 2 பேர் தலீபான் போராளிகள் ஆவர்.  இந்த தாக்குதலில் சையதுவின் மகனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.  இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் பொறுப்பேற்று உள்ளனர்.