ஆப்கானிஸ்தானில் சீக்கிய குருத்வாராவை அடித்து, சேதப்படுத்திய தலீபான்கள்


ஆப்கானிஸ்தானில் சீக்கிய குருத்வாராவை அடித்து, சேதப்படுத்திய தலீபான்கள்
x
தினத்தந்தி 5 Oct 2021 5:40 PM GMT (Updated: 2021-10-05T23:10:43+05:30)

ஆப்கானிஸ்தானில் சீக்கிய குருத்வாராவுக்குள் நுழைந்த ஆயுதமேந்திய தலீபான்கள் அதனை அடித்து சேதப்படுத்தினர்.

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில் கர்தே பர்வான் என்ற சீக்கிய குருத்வாரா ஒன்று அமைந்துள்ளது.  இதற்குள் ஆயுதமேந்திய தலீபான் அமைப்பினர் நுழைந்தனர்.  அவர்கள் குருத்வாராவை அடித்து சேதப்படுத்தினர்.

அதன்பின்னர் குருத்வாராவில் இருந்த சீக்கியர்கள் சிலரையும் சிறைப்பிடித்து சென்றனர்.  சி.சி.டி.வி. கேமிராக்களையும் அவர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர்.

அந்நாட்டின் கிழக்கே பக்தியா மாகாணத்தில் அமைந்த குருத்வாராவின் மேற்கூரையில் இருந்த சீக்கியர்களின் புனித கொடியை தலீபான்கள் நீக்கியிருந்தது சர்ச்சை ஏற்படுத்தியது.


Next Story