உலக அளவில் கொரோனா பாதிப்பு 23.86 கோடியாக உயர்வு


உலக அளவில் கொரோனா பாதிப்பு 23.86 கோடியாக உயர்வு
x
தினத்தந்தி 11 Oct 2021 1:57 AM GMT (Updated: 11 Oct 2021 1:57 AM GMT)

உலக அளவில் கொரோனா பாதிப்பு 23.86 கோடியாக உயர்வடைந்து உள்ளது.


வாஷிங்டன்,


உலக நாடுகள் முழுவதிலும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா, தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.  இந்த நிலையில், மொத்த கொரோனா பாதிப்புகள் 23.86 கோடியாக உயர்வடைந்து உள்ளது.

இதுவரை 48.66 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர்.  21.57 கோடி பேர் குணமடைந்து சென்று உள்ளனர்.

இவற்றில், அதிக அளவில் பாதிப்புகளை கொண்ட அமெரிக்காவில் ஒரே நாளில் 24,694 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  இதேபோன்று, ஒரே நாளில் கொரோனாவுக்கு 517 பேர் உயிரிழந்து உள்ளனர்.

அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 4.52 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  மொத்தம் 7 லட்சத்து 33 ஆயிரத்து 575 பேர் உயிரிழந்து உள்ளனர்.

பிரேசில் நாட்டில் ஒரே நாளில் 8,639 பேருக்கு பாதிப்பும், 167 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.  மொத்த பாதிப்பு 2.15 கோடியாக உயர்ந்து உள்ளது.  மொத்த உயிரிழப்பு 6 லட்சத்து ஓராயிரத்து 47 பேராக உள்ளது.  இந்தியாவில் 3.4 கோடி பேருக்கு பாதிப்பும், 4.51 லட்சம் பேர் உயிரிழந்தும் உள்ளனர்.


Next Story