பிலிப்பைன்சில் கடுமையான சூறாவளி புயல்; 19 பேர் பலி


பிலிப்பைன்சில் கடுமையான சூறாவளி புயல்; 19 பேர் பலி
x
தினத்தந்தி 14 Oct 2021 9:30 AM GMT (Updated: 14 Oct 2021 9:30 AM GMT)

பிலிப்பைன்சில் ஏற்பட்ட கடுமையான சூறாவளி புயலுக்கு 19 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

லூஜன்,


பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கே லூஜன் தீவு பகுதியில் கடந்த வாரம் கொம்பாசு என்ற சூறாவளி புயல் உற்பத்தியானது.  மேரிங் என்றும் அழைக்கப்படும் இந்த புயலின் பாதிப்புக்கு இதுவரை 19 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

இதுதவிர 13 பேர் காணாமல் போயுள்ளனர்.  புயலால் 325 வீடுகள் சேதமடைந்து உள்ளன.  அவற்றில் 89 வீடுகள் பராமரிப்பு செய்ய முடியாத நிலைக்கு சென்று விட்டன என தேசிய பேரிடர் ஆபத்து குறைப்பு மற்றும் மேலாண் கவுன்சில் தெரிவித்து உள்ளது.

இந்த சூறாவளி புயலால், மொத்தம் 50 ஆயிரத்து 40 வீடுகளில் வசிப்பவர்கள் அல்லது 1 லட்சத்து 94 ஆயிரத்து 677 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சூறாவளி புயலானது பிலிப்பைன்சை விட்டு நகர்ந்து சென்று விட்டாலும் தொடர்ச்சியாக கனமழை பெய்யும் என அச்சுறுத்தலும் ஏற்பட்டு உள்ளது என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

புயல் எதிரொலியாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டு உள்ளனர்.


Next Story