உலக பட்டினிக் குறியீடு ; பாகிஸ்தான், வங்காளதேசத்தை விட பின் தங்கியது இந்தியா


உலக பட்டினிக் குறியீடு ; பாகிஸ்தான், வங்காளதேசத்தை விட பின் தங்கியது இந்தியா
x
தினத்தந்தி 15 Oct 2021 2:59 AM GMT (Updated: 15 Oct 2021 2:59 AM GMT)

கடந்த 2020-ம் ஆண்டு 107 நாடுகளுக்கான பட்டியலில், 94-வது இடத்தில் இருந்த இந்தியா, 116 நாடுகளுக்கான பட்டியலில் 2021ம் ஆண்டில் 101வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.



உலக அளவில் பட்டினி மற்றும் ஊட்டசத்து குறைபாடு ஆகியவற்றை ஆய்வு செய்து பட்டினிக் குறியீடு பட்டியல் வெளியிடப்படுகிறது. ஐயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் அமைப்பு மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ப் ஆகிய அமைப்பும் சேர்ந்து பட்டினிக் குறியீடு பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடு, 5-வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் சத்துணவு குறைபாட்டால் தங்கள் உயர்த்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருத்தல், வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் இருத்தல், 5வயதுக்கு உட்பட்ட குழந்தை உயிரிழப்புகள் ஆகிய காரணிகளை இந்தப்பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

2021ம் ஆண்டுக்கான உலக பட்டினிக் குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. இதில், மொத்தம் இடம் பெற்றுள்ள 116 நாடுகளில் இந்தியா 101-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.   அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளத்தை விட இந்தியா பின் தங்கியுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு 107 நாடுகளுக்கான பட்டியலில், 94-வது இடத்தில் இருந்த இந்தியா, 116 நாடுகளுக்கான பட்டியலில் 2021ம் ஆண்டில் 101வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதேசமயம், சீனா, பிரேசில், குவைத் உள்ளிட்ட 18 நாடுகளில் பட்டினிக் குறியீடு என்பது 5-க்கும் குறைவாகவே இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருப்பது 17.3 சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும் இ்ந்தியாவில் பட்டினியின் அளவு அபாயக்கட்டத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.


Next Story