உலக செய்திகள்

குட்டியை காப்பாற்ற முதலையை வதம் செய்த யானை! - வீடியோ + "||" + Elephant Crushes Crocodile to Death to Save Her Calf in Zambia National Park

குட்டியை காப்பாற்ற முதலையை வதம் செய்த யானை! - வீடியோ

குட்டியை காப்பாற்ற முதலையை வதம் செய்த யானை! - வீடியோ
குட்டியை காப்பாற்ற தாய் யானை முதலையை காலால் மிதித்து கொல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஸாமியா,

யானைகள் பொதுவாக அமைதியான விலங்காகவே அறியப்படுகிறது. அதன் வாழ்வியலுக்குள் நாம் நுழையாத வரை மட்டுமே. மீறினால் யானையைவிட ஆக்ரோஷமான விலங்கு வேறு எதுவும் இல்லை என சொல்லும் அளவுக்கு மாறிவிடும்.

இந்தநிலையில், ஆப்ரிக்காவின் ஸாமியா நாட்டில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவில்  அப்படியொரு சம்பவம் தான் இங்கும் நடந்துள்ளது.

நீர் குட்டையில் தாயுடன் தண்ணீர் குடிக்க வந்த குட்டி யானையை அங்கிருந்த முதலை லாவகமாக பிடிக்க முயல, குட்டிய யானை பிளிரியது. உடனே ஓடிந்த வந்த தாய் யானை தனது  குட்டியை காப்பாற்ற முதலையை தன் காலாலேயே மிதித்து கொன்றுள்ளது. இதனை கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளின் ஒன்றான ஜாம்பியாவில் சுற்றுலா சென்ற ஒரு குழு படமாக்கி சமூக வலைதளங்களில்  வெளியிட்டுள்ளது.