பிரான்ஸ் பிரதமருக்கு கொரோனா தொற்று பாதிப்பு


பிரான்ஸ் பிரதமருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
x
தினத்தந்தி 23 Nov 2021 12:18 PM GMT (Updated: 23 Nov 2021 12:18 PM GMT)

ஐரோப்பிய நாடுகளில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

பாரிஸ், 

பிரான்ஸ் பிரதமர்  ஜீன் காஸ்டெக்ஸ்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஜீன் காஸ்டெக்ஸ், 10 நாட்கள் தனிமையில் இருந்து பணிகளை கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. காஸ்டெக்ஸ் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பெல்ஜியம் சுற்றுப்பயணம் செய்த ஜீன் காஸ்டெக்ஸ், அந்நாட்டு பிரதமரை சந்தித்து பேசியிருந்தார். பின்னர் காஸ்டெக்ஸ் நாடு திரும்பிய நிலையில், அவரது மகளுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து, காஸ்டெக்சுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஐரோப்பிய நாடுகளில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஆஸ்திரியாவில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது 


Next Story