உலக செய்திகள்

அமெரிக்கா தலைமையில் 'ஜனநாயக உச்சி மாநாடு’ - சீனா, ரஷியாவுக்கு அழைப்பில்லை... + "||" + Biden includes Taiwan among 110 invitees to democracy summit

அமெரிக்கா தலைமையில் 'ஜனநாயக உச்சி மாநாடு’ - சீனா, ரஷியாவுக்கு அழைப்பில்லை...

அமெரிக்கா தலைமையில் 'ஜனநாயக உச்சி மாநாடு’ - சீனா, ரஷியாவுக்கு அழைப்பில்லை...
அமெரிக்கா தலைமையில் நடைபெற உள்ள ஜனநாயக உச்சி மாநாட்டில் பங்கேற்க தைவானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,

அமெரிக்கா தலைமையில் ‘ஜனநாயக உச்சி மாநாடு’ என்ற பெயரில் மாநாடு நடைபெற உள்ளது. அடுத்த மாதம் 9 மற்றும் 10 ஆகிய இரு தேதிகளில் காணொலி காட்சி மூலம் நடைபெற உள்ளது. 

முதல் முறையாக நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உலகின் 110 நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. ஜோ பைடன் தலைமையில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

ஜனநாயக நாடுகள் சந்திக்கும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. மேலும், இந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளை எதிர்கொள்தல் குறித்து தலைவர்கள் கலந்துரையாக இந்த உச்சிமாநாடு வழிவகுக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.      

இந்த மாநாட்டில் பங்கேற்க இந்தியா, பாகிஸ்தான், ஈராக் உள்பட 110 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, சீனா, ரஷியா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் இந்த ஜனநாயக உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்க அழைப்பு விடுக்கவில்லை. 

ஆனால், இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்க தைவானுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பு தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதியே என்று கூறி வரும் சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அணிவகுப்பில் புகுந்த கார் - 5 பேர் பலி
அமெரிக்காவில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அணிவகுப்பில் பங்கேற்றவர்கள் மீது வேகமாக வந்த கார் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
2. அமெரிக்கா: காற்றில் பறந்த வங்கி பணத்தை கைநிறைய அள்ளிச்சென்ற மக்கள்..!
சாலையில் கிடந்த பணத்தை எடுத்த நபர்களிடமிருந்து பணத்தை திரும்ப பெறும் முயற்சியில் அந்த நாட்டு காவல்துறை ஈடுபட்டுள்ளது.
3. அமெரிக்காவில் விரைவில் 18 வயதானோருக்கு ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி
அமெரிக்காவில் விரைவில் 18 வயதானோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவது தொடங்கி விடும் என்று அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.
4. அமெரிக்காவில் பிரபல ராப் இசைக்கலைஞர் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் பிரபலமான ராப் இசைக்கலைஞர் யெங் டால்ப் சுட்டுக்கொல்லப்பட்டார்.
5. அமெரிக்காவில் விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 11 வயது சிறுமி
விபத்து ஏற்பட்ட போது, கடைசியாக தனது தந்தை தன்னை அணைத்துக் கொண்டு காயமடையாமல் காப்பாற்றினார் என்று சிறுமி லேனி பெர்டியூ கூறியுள்ளார்.