மீண்டும் அவரசநிலைக்கு வாய்ப்பு இஸ்ரேல் எச்சரிக்கை


மீண்டும் அவரசநிலைக்கு வாய்ப்பு இஸ்ரேல் எச்சரிக்கை
x
தினத்தந்தி 26 Nov 2021 3:17 PM GMT (Updated: 26 Nov 2021 3:17 PM GMT)

புதிய வகை கொரோனா வைரசால் இஸ்ரேலில் மீண்டும் அவரச நிலைக்கு வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு பிரதமர் நப்தாலி பென்னெட் கூறியுள்ளார்.

ஜெருசலம்,

தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து,  மலாவியில் இருந்து இஸ்ரேல் திரும்பிய பயணி ஒருவருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. 

இது குறித்து அநாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், மாறுபட்ட வைரஸ் தொற்று ஏற்பட்ட  நபர் மற்றும் 2 பயணிகள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திகொண்டவர்கள் என தெரிவித்தனர்.

இந்தநிலையில் புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து விவாதிக்க இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னெட் உடனடியாக அமைச்சரவையை கூட்டினார். அதில்,  இது டெல்டா மாறுபாட்டை விட மிகவும் தொற்றுநோயாகவும் வேகமாகவும் பரவுவதாகவும் அவர் கூறினார். இது தடுப்பூசிகளுக்கு கட்டுப்படுமா? அல்லது ஆபத்தானதா என்பது குறித்த தகவல்களை அதிகாரிகள் சேகரித்து வருவதாக அவர் தெரிவித்தார். 

மேலும்  "நாம் தற்போது அவசரகால விளிம்பில் இருக்கிறோம். அனைவரும் தயாராக இருக்குமாறும், 24 மணி நேரமும் பணியில் முழுமையாக ஈடுபடுமாறும் மந்திரிகளை கேட்டுக்கொண்டார்.

Next Story