‘ஒமிக்ரான்’ வைரஸ் இதுவரை 17 நாடுகளில் பரவி உள்ளதாக தகவல்


‘ஒமிக்ரான்’ வைரஸ் இதுவரை 17 நாடுகளில் பரவி உள்ளதாக தகவல்
x
தினத்தந்தி 30 Nov 2021 5:26 PM GMT (Updated: 30 Nov 2021 5:26 PM GMT)

‘ஒமிக்ரான்’ வைரஸ் இதுவரை 17 நாடுகளில் பரவி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லண்டன்,

ஒமிக்ரான் கொரோனா வைரஸ் குறித்து உலகமே அச்சத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்காவில்  முதன் முதலாக கண்டறியப்பட்டுள்ள இந்த வகை கொரோனா ஐரோப்பிய நாடுகளிலும் வேகமாக கால் பதித்து வருகிறது. ஒமிக்ரான் பரவலால் தென் ஆப்பிரிக்காவில் வேகமாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

ஒமிக்ரான் கொரோனா வைரஸ் உலக அளவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், பல்வேறு நாடுகள் தங்கள் எல்லைகளை மூடி வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதித்துள்ளது.

இந்நிலையில்,‘ஒமிக்ரான்’ புதிய வகை கொரோனா வைரஸ் இதுவரை 17 நாடுகளில் பரவி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் பரவிய 17 நாடுகளில் நோய் மேலும் பரவி விடாமல் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

ஒமிக்ரான் பரவியுள்ள 17 நாடுகள் விவரம் வருமாறு:-

1. தென்ஆப்பிரிக்கா

2. ஹாங்காங்

3,. போட்ஸ்வானா

4. ஆஸ்திரேலியா

5. இத்தாலி

6. ஜெர்மனி

7. நெதர்லாந்து

8. இங்கிலாந்து

9. இஸ்ரேல்

10. பெல்ஜியம்

11. சுவிட்சர்லாந்து

12. கனடா

13. பிரான்சு

14. ஸ்பெயின்

15. போர்ச்சுக்கல்

16. டென்மார்க்

17. செக் குடியரசு

Next Story