உலக செய்திகள்

அமெரிக்காவில் 11 மாகாணங்களில் “ஒமைக்ரான்” கொரோனா பரவல் + "||" + Omicron corona distribution in 11 states in the United States

அமெரிக்காவில் 11 மாகாணங்களில் “ஒமைக்ரான்” கொரோனா பரவல்

அமெரிக்காவில் 11 மாகாணங்களில் “ஒமைக்ரான்” கொரோனா பரவல்
அமெரிக்காவில் குறைந்தபட்சம் 11 மாகாணங்களில் ஒமைக்ரான் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,

கொரோனாவில் இருந்து உருமாற்றமடைந்த ஒமைக்ரான் வைரஸ் தொற்று, தென்ஆப்பிரிக்காவில் தோன்றி பிற நாடுகளிலும் பரவி வருகிறது. புதிதாக உருவெடுத்துள்ள இந்த ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. 

இந்தநிலையில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனாவான ‘ஒமைக்ரான்’ ஏற்கனவே அமெரிக்காவில் கால்பதித்து விட்டது. அதோடு அது வேகமாகவும் பரவி வருகிறது. அமெரிக்காவில் 8 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் குறைந்தபட்சம் 11 மாகாணங்களில் ஒமைக்ரான் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நியூ ஜெர்சி, மேரிலேண்ட், மிசவுரி, நெப்ராஸ்கா, பென்சில்வேனியா, மற்றும் உடா ஆகிய மாகாணங்கள் தங்கள் முதல் ஒமைக்ரான் வகை கொரோனாவை கடந்த வெள்ளியன்று பதிவு செய்தன. தொடர்ந்து, கலிஃபோர்னியா, கொலொராடோ, ஹவாய், மின்னசோடா, மற்றும் நியூயார்க் மாகாணங்களிலும் தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்கா: இரவு விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு - 4 பேர் பலி
அமெரிக்காவில் இரவு விருந்து நிகழ்ச்சியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
2. அமெரிக்காவில் ஒரேநாளில் மேலும் 7,66,277 பேருக்கு கொரோனா பாதிப்பு..!
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,66,277 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
3. யூதர்களை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்த பயங்கரவாதி யார்? மீட்பு நடவடிக்கையில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்
யூதர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த கட்டிடத்திற்குள் அதிரடியாக நுழைந்த ஸ்வாட் பிரிவு பாதுகாப்புபடையினர் பயங்கரவாதியை சுட்டுக்கொன்றனர்.
4. அமெரிக்காவில் சரக்கு ரெயில்களில் கொள்ளை..!
அமெரிக்காவில் சரக்கு ரெயில்களில் கொள்ளையடிக்கப்படுவதாக யூனியன் பசிபிக் ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
5. அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுப்பு
அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.